மோடியின் விசா பிரச்சினையை இந்திய ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன: அமெரிக்கா குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: நரேந்திர மோடி பிரதமரானால் அவருடன் இணைந்து செயல்படுவோம். அதேசமயம் மோடியின் விசா பிரச்சினையை இந்திய ஊடகங்கள் தான் பூதாகரமாகச் சித்தரிக்கின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தற்போதைய குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரத்தில் தொடர்பு இருப்பதாக கூறி விசா வழங்க மறுத்து வருகிறது அமெரிக்கா.

US says ready to work with Modi if he becomes PM, blames media for visa row

இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்தால் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு அமெரிக்க உயர் அதிகாரி கூறியதாவது, ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைவருடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். இதுகுறித்த கேள்விக்கே இடம் இல்லை.

விசா விவகாரம் ஒரு விவகாரம் இல்லை. விசா விவகாரம் பெரும்பாலும் இந்திய ஊடகங்களாலே பெரிதாக்கப்படுகிறது. நரேந்திரமோடி, விசா கேட்டு விண்ணப்பிக்கலாம். அதனை நாங்கள் பரிசீலனை செய்வோம். நரேந்திர மோடி விசாவிற்கு விண்ணப்பபிக்க வில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+