டெலிகிராமில் லீக்கான இஸ்ரேலின் மாஸ்டர்பிளான்.. அமெரிக்க உளவில் விழுந்த ஓட்டை.. சிஐஏவிற்கு ஷாக்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் மீது எப்படி பதிலடி கொடுக்கும்.. எப்போது பதிலடி கொடுக்கும் என்பது தொடர்பான உளவு தகவல்கள் நேற்று முதல்நாள் லீக்கானது. ஈரான் மீது இஸ்ரேல் என்ன மாதிரியான பதிலடி தரப்போகிறது என்பது தொடர்பான உளவுத்துறை ஆவணங்கள் சில கசிந்து உள்ளன.

இஸ்ரேலின் பிளான் தொடர்பாக இரண்டு அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்கள்.. அமெரிக்கா முழுக்க டெலிகிராமில் கசிந்து உள்ளன. ஈரானுக்கு ஆதரவான டெலிகிராம் பக்கங்கள் இதை கசியவிட்டுள்ளன.

israel palestine israel palestine war international

நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (NGA) க்கு சொந்தமான இந்த ஆவணங்கள் கசிந்து உள்ளன. அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்கள் மூலம் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சிகள் மற்றும் அவர்கள் ராணுவத்தின் தயார்நிலை பற்றிய பல்வேறு தகவல்கள் இந்த உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த படங்கள்தான் லீக்காகி உள்ளன.

அமெரிக்கா அதிர்ச்சி: அமெரிக்க அதிபர் பிடன் இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளாராம். அமெரிக்க அரசாங்க ஆவணங்கள் வெளிப்படையாக கசிந்தது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் "ஆழ்ந்த கவலையில்" இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கையாக வெளியிட்டு உள்ளது. கடந்த வாரம் சமூக ஊடக தளமான டெலிகிராமில் லீக்கான ஆவணங்கள் எப்படி வெளியாகின என்பது வெள்ளை மாளிகைக்கே தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

அக்டோபர் 15 மற்றும் 16 தேதியிட்ட இரண்டு ஆவணங்களும் அமெரிக்காவின் உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இஸ்ரேலின் ராணுவப் பயிற்சிகளைக் காட்டும் செயற்கைக்கோள் படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது ஈரான் மீதான பதிலடித் தாக்குதலுக்கான இஸ்ரேலின் பிளானிங் போல தோன்றுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் மிக பயங்கரமான தாக்குதல் நடத்த போவது இந்த ஆவணங்கள் மூலம் உறுதியாகி உள்ளன.

கடந்த அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேலில் ஏறக்குறைய 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் நாட்டை தாக்கினால்.. பதிலுக்கு "தீர்க்கமான மற்றும் அதிர்ச்சி அளிக்கும்" பதிலடியை அளிப்போம் என்று ஈரான் எச்சரித்து உள்ளது.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டெரஸிடம் இது பற்றி எச்சரித்து உள்ளார்.

ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் "விரைவில் பதிலடி கொடுக்கும்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant கடந்த வாரம் கூறினார். இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் துல்லியமான மற்றும் கொடியதாக இருக்கும் என்று உறுதியளித்தார்.

இஸ்ரேல் திட்டம்: கடந்த அக்டோபர் 1 ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த முக்கிய முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் ஏற்கனவே ஈரானில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஈரானில் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை இஸ்ரேல் மார்க் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாஹ்வின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதற்கு பதிலடியாக, அக்டோபர் 1ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்ரேல் அமெரிக்கா இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இஸ்ரேல் அமெரிக்கா இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில்.. ஈரானை எப்படி தாக்க வேண்டும்.. எங்கே தாக்க வேண்டும்.. என்று பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+