"வாட்".. 60 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் ஒரு மனிதர்! வியட்நாமில் ஒரு 'சூப்பர் ஹியூமன்'.. எப்புட்றா?
ஒரு மனிதரால் எப்படி உயிர் வாழ முடிகிறது என்று தெரியவில்லை என மருத்துவர்களே ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும், உலகில் இவரை போன்று ஒரு மனிதர் இருக்க முடியாது என்றும், இவர் மருத்துவ உலகுக்கே சவால் எனவும் மருத்துவர்கள் கூற
ஹனோய்: வியட்நாமில் ஒரு மனிதர் 60 ஆண்டுகளாக தூங்காமலேயே வாழ்ந்து வரும் விஷயம் தற்போதுதான் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.
ஒரு நாள் இரவு தூங்காமல் இருந்தாலே அடுத்த நாளை நகர்த்துவது நம்மில் பெரும்பாலானோருக்கு நரக வேதனையை தரும் நிலையில், எப்படி ஒரு மனிதரால் இத்தனை ஆண்டுகளாக தூங்காமல் இருக்க முடியும் என மக்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
மருத்துவ உலகுக்கே சவால் விடும் அந்த சூப்பர் ஹியூமன் மனிதரின் சுவாரசியக் கதை குறித்துதான் இங்கு பார்க்க போகிறோம்.

உணவை விட முக்கியம் தூக்கம்
மனிதன் உயிர் வாழ தேவையானது உணவு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த உணவை விட மனிதனுக்கு தேவையானதுதான் 'தூக்கம்'. சாப்பிடாமல் கூட ஒரு மாதம் வரை மனிதரால் வாழ்ந்து விட முடியும் எனக் கூறும் மருத்துவர்கள், 11 நாட்கள் ஒரு மனிதன் தூங்காமல் இருந்தால் இறந்துவிடுவான் எனக் கூறுகிறது. நாளொன்றுக்கு 6 முதல் 8 மணிநேரம் மனிதர்கள் கட்டாயம் தூங்க வேண்டும் என்றும், அப்படியில்லை என்றால் உடல்நிலையிலும், மனநிலையிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்
தூக்கத்துக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்கையில், வியட்நாமில் ஒரு மனிதர் பல ஆண்டுகளாக ஒரு பொட்டு கூட தூங்காமல் உயிர் வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. அவரது பெயர் தாய் நகோக் (80). இவரை பற்றி கேள்விப்பட்ட யூடியூப் சேனல் ஒன்று, நேரடியாக வியட்நாமுக்கு சென்று அவருடன் 10 நாட்கள் செலவிட்டு அவரது அன்றாட நடவடிக்கைகளை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகியதை அடுத்தே இப்படியொரு மனிதர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

"தூங்க ஆசையாக உள்ளது"
இதுகுறித்து அந்த வீடியோவில் தாய் நகோக் கூறுகையில், "நானும் சிறு வயதில் எல்லோரையும் போன்றுதான் தூங்கி வந்தேன். இந்நிலையில் 1962-ம் ஆண்டு எனக்கு 20 வயது இருக்கும் போது எனக்கு பயங்கர காய்ச்சல் ஏற்பட்டது. அந்தக் காய்ச்சல் வந்தது முதலாக என்னால் தூங்க முடியவில்லை. காய்ச்சல் குணமான பிறகும் எனக்கு தூக்கம் வரவில்லை. ஆனால் தூக்கம் இல்லாதது எனக்கு பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால், சிறிது நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தூங்காமல் இருப்பது வெறுமையாக இருக்கிறது" என்கிறார் தாய் நகோக்.

மருத்துவ உலகுக்கே சவால்
இதனிடையே, தூங்காமல் இருப்பதால் இவருக்கு உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு உடலும், மனமும் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 60 ஆண்டுகளாக தூங்காமல் ஒரு மனிதரால் எப்படி உயிர் வாழ முடிகிறது என்று தெரியவில்லை என மருத்துவர்களே ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும், உலகில் இவரை போன்று ஒரு மனிதர் இருக்க முடியாது என்றும், இவர் மருத்துவ உலகுக்கே சவால் எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications