6 ஆயிரத்து 387 கி.மீட்டர் நடந்தே சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய பாகிஸ்தானியர்
மக்கா: சுமார் 6 ஆயிரத்து 387 கி.மீட்டர் தூரத்தை கால்நடையாக நடந்தே சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றியுள்ளார் பாகிஸ்தானியர் ஒருவர்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் இறுதி கடமை ஹஜ் எனப்படும் புனித யாத்திரை. இறைவனால் இறைவனை வணங்க கட்டப்பட்ட உலகின் முதல் வணக்க ஸ்தலத்தை தரிசிப்பதும் முஹம்மது நபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை கண்டு வருவதுமே ஹஜ் யாத்திரை.
தொலைதூர தேசங்களில் வசிப்பவர்கள் விமானம் அல்லது கப்பலில் பயணித்து ஹஜ்ஜை நிறைவேற்றினால், மக்காவுக்கு அருகாமையில் உள்ள நாடுகளில் இருப்பவர்கள் கார், பஸ் போன்ற வாகனங்களில் சென்று தங்களது புனித கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

கால்நடையாக....
அந்தவகையில், சற்று வித்தியாசமாக பாகிஸ்தானை சேர்ந்த கர்ல்சாதா கர்சத் ரய் என்ற 37 வயது இச்லாமியர் ஒருவர் சுமார் 6 ஆயிரத்து 387 கி.மீட்டர் தூரத்தை கால்நடையாக நடந்தே பயணித்து ஹஜ் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

நான்கு மாதங்களாக...
கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து தொடங்கப்பட்ட அவரது பயணம் ஈரான், ஈராக், ஜோர்டான் வழியாக நடந்து கடந்த 1ம் தேதி சவுதி அரேபியாவைச் சென்றடைந்தார்.

கைபரிலிருந்து....
இதற்கு முன், கடந்த 2007-ம் ஆண்டு உலக சமாதானத்துக்காக கைபரில் இருந்து பாகிஸ்தானுக்கு 85 நாட்களில் ஆயிரத்து 999 கி.மீட்டர் நடந்தே சென்று சாதனை படைத்தார் கர்ல்சாதா.

சாதனை...
பின்னர் தனது சாதனையைத் தனே முறியடிக்கும் வகையில் 2011ம் ஆண்டு கைபரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு 72 நாட்களில் 2 ஆயிரத்து 287 கி.மீட்டர் நடந்து சென்று புதியதொரு சாதனையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications