எப்போ வெடிக்கும்னே தெரியாது! ஈரானை நோக்கி பாயும் இரும்பு அரக்கன்.. மத்திய கிழக்கை சூழ்ந்த போர் மேகம்
டெஹ்ரான்: மத்திய கிழக்கு பகுதி ஒரு பதற்றமான சூழலை எதிர் கொண்டுள்ளது. ஈரான் -அமெரிக்கா இடையேயான உறவில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் போக்கு, தற்போது ராணுவ ரீதியான நடவடிக்கைகளால் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க கடற்படையின் சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் ஒன்றான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், மத்திய கிழக்கு கடல் பகுதிக்குள் நுழைந்திருப்பது அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானில் கடந்த சில வாரங்களாக நிலவும் உள்நாட்டு சூழ்நிலை காரணமாக அந்த பிராந்தியத்தையே போர்க் களமாக மாற்றி வருகிறது. பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஈரானின் பல பகுதிகளில் மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் அமைதியானதாக இருந்த இந்த போராட்டங்கள், நாளடைவில் தீவிரம் அடைந்து அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த உள்நாட்டு போராட்டங்களை முன்வைத்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஈரான் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

ஈரான் அமெரிக்கா மோதல்
குறிப்பாக, ஈரானில் நடைபெறும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட கருத்துகள், ஈரான் அரசை ஆத்திரமடையச் செய்ததாக கூறப்படுகிறது. இதை வெளிநாட்டு தலையீடாகவே ஈரான் பார்க்கிறது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா ஈரானின் உள்நாட்டு நிலைமையை காரணம் காட்டி ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதற்கு நேரடியாகவும் கடுமையாகவும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு போர் பதற்றம்
குறிப்பாக, அமெரிக்க படைகள் தங்கியுள்ள வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவ தளங்கள் இலக்காக மாறும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இதனால், ஈரானுக்கு அருகிலுள்ள பல நாடுகளில் போர் அச்சம் பரவத் தொடங்கியுள்ளது. மேலும், அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் தங்களின் நிலப்பரப்பை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி அனுமதி வழங்கப்பட்டால் அதற்கும் கடும் பதிலடி வழங்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்
இந்த சூழ்நிலையில்தான், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருந்து அனுப்பப்பட்ட அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் மத்திய கிழக்கை வந்தடைந்துள்ளது. நிமிட்ஸ் வகை அணுசக்தி மூலம் இயங்கும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல், கேரியர் ஸ்ட்ரைக் குரூப் 3-இன் முக்கிய அங்கமாகும். ஜனவரி 19 அன்று மலாக்கா நீரிணை வழியாக மத்திய கிழக்கை நோக்கி புறப்பட்ட இந்த கப்பலுக்கு, மூன்று சக்திவாய்ந்த ஆர்லே பர்க் வகை ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. இந்த கப்பல் குழுவின் வருகை, வெறும் பயிற்சி நடவடிக்கைக்கானது அல்ல என்றே பலரும் கருதுகின்றனர்.
அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்ட சமூக ஊடக பதிவில், இந்த போர்க்கப்பல் குழு பிராந்திய பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை ஈரான் மீது அழுத்தம் அதிகரிக்கும் முயற்சியாகவே அந்த நாடு பார்க்கிறது. இதற்கிடையே, ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு ட்ரம்ப் உத்தரவிட்டால், இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் ராணுவ எச்சரிக்கை
அதே நேரத்தில், எந்தவொரு தாக்குதலையும் ஈரான் அமைதியாக ஏற்றுக் கொள்ளாது என்றும், அது முழுமையான பதிலடிக்கு வழிவகுக்கும் என்றும் ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த போர்க்கப்பல்கள் முன்னெச்சரிக்கையாகவே அனுப்பப்பட்டவை. அவற்றை பயன்படுத்த வேண்டிய சூழல் வராது என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தாலும், மத்திய கிழக்கில் குவியும் ராணுவ சக்திகள், அந்த நம்பிக்கையை சந்தேகத்திற்கு உள்ளாக்குகின்றன. மொத்தத்தில், ஈரான் - அமெரிக்கா இடையேயான இந்த பதற்றம், ஒரு சிறிய சம்பவமே பெரும் போர் சூழலாக மாறக்கூடிய அபாய நிலையை உருவாக்கியுள்ளது.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அபுதாபியை குறிவைத்து ஈரான் அட்டாக்.. வீதிகளில் சிதறிய ஏவுகணை சிதைவுகள்! இந்தியர் பலி, பலர் காயம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications