Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கமேனியை நெருங்கினோம்.." ஈரான் உயர்மட்ட தலைவரை கொல்ல திட்டம்.. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பகீர்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையே 12 நாள் மோதலின் போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றால் மட்டுமே பிரச்சினை முடியும் என இஸ்ரேல் கூறி வந்தது. இப்போது பிரச்சினை முடிந்துவிட்ட நிலையில், கமேனி விவகாரம் குறித்து இஸ்ரேல் சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளது. கமேனியை கொல்லும் பிளான் இருந்தது உண்மை தான் எனக் கூறியுள்ள இஸ்ரேல், பங்கருக்கு சென்றதால் அவர் தப்பிவிட்டார் எனக் கூறியுள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஜூன் 13ம் தேதி மோதல் வெடித்தது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டது. இந்தச் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டு, பங்கர் பஸ்டர் வெடிகுண்டை வீசியது. அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடந்த முயன்றது.

We would have taken him out Israel defence minister confirms Khamenei s elimination was on cards

கமேனியை கொல்லும் பிளான்

இருப்பினும், அது பெரிய மோதலாக மாறவில்லை. அதன் பிறகு சட்டென மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த மோதல் நடந்த போது ஈரான் பிரதமர் கமேனியை கொன்றால் தான் பிரச்சினை முடியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட இதே கருத்துகளை அப்போது கூறியிருந்தார்.

இதற்கிடையே கமேனியை கொல்லும் திட்டத்தை வைத்திருந்தது உண்மைதான் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ். கமேனி கொல்லும் திட்டம் எல்லாம் இறுதியானதாகத் தெரிவிக்கும் அவர், கடைசி நேரத்தில் அவர் பங்கருக்கு சென்றதால் தப்பிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

நெருங்கிவிட்டோம்

இது தொடர்பாக காட்ஸ் மேலும் கூறுகையில், "கமேனி பதுங்காமல் எங்கள் பார்வையில் இருந்திருந்தால், அவரை நாங்கள் கொன்றிருப்போம். கமேனி பங்கருக்குள் சென்றுவிட்டார். தனது தளபதிகளையே கூட அவர் தொடர்பு கொள்ளவில்லை. இதன் காரணமாகவே தாக்குதல் சாத்தியம் இல்லாமல் போனது. மோதல் நீடித்த போது கமேனியை தீவிரமாகத் தேடினோம். எங்களால் முடிந்த எல்லா சோர்ஸ்களையும் வைத்துத் தேடினோம். ஆனால், இஸ்ரேலின் நோக்கம் ஆட்சி மாற்றமல்ல.. ஈரானின் தலைமையைப் பலவீனமாக்கி, மோதலின் நடுவில் அழுத்தம் கொடுப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது" என்றார்.

இஸ்ரேல் ஈரான் மோதல்

கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல் ஈரான் மோதல் தொடங்கியது. இது 12 நாட்கள் நீடித்த நிலையில், கடந்த ஜூன் 25ம் தேதி மோதல் முடிவுக்கு வந்தது. மோதல் ஆரம்பித்த நாளே இஸ்ரேலின் படைகள் பல டாப் ஈரான் தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளைக் கொன்றது. இது தொடர்பாக காட்ஸ் கூறுகையில், "வான்வெளி தாக்குதலில் எங்கள் கை தான் ஓங்கி இருந்தது. ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம்" என்றார்.

அமெரிக்காவுக்குத் தெரியுமா?

கமேனியை கொல்லும் திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் வாங்கப்பட்டதா என்ற கேள்விக்கு, "இந்த விஷயங்களுக்கு எங்களுக்கு அனுமதி தேவையில்லை.. கமேனி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா போல தான். எனவே கமேனி தலைமறைவாகவே இருந்துவிடுவது தான் அவருக்கு நல்லது. அதேநேரம் இப்போது மோதல் முடிந்துவிட்டது. இதன் பிறகு கமேனி உயிருக்குக் குறிவைக்கும் திட்டம் எதுவும் இல்லை. மோதல் இருக்கும் போது இருந்த சூழல் வேறு.. இப்போது இருக்கும் சூழல் வேறு! அதேநேரம் வரும் காலத்தில் ஏதாவது அத்துமீறினால் அதற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்றார்.

மேலும், ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் திறன்களை இஸ்ரேல் அழித்தாலும்.. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பிடமும் தங்களுக்குத் தெரியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இஸ்ரேலின் தாக்குதல்கள் ஈரானைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகத் தெரிவித்த அவர், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க விட மாட்டோம் என்றும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+