"அத்தனையும் ஆபாச நூல்கள்!" இந்து மதம் குறித்து சர்ச்சை! வங்கதேச தலைவருக்கு கிளம்பிய எதிர்ப்பு
டாக்கா: வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான அத்துமீறல் என்பது அவ்வப்போது நடைபெறும் தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழலில் வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் இந்து மதம் குறித்து இழிவான கருத்துகளைக் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கொரோனாவுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து எந்தவொரு நாடும் தப்பிக்கவில்லை. நமது அண்டை நாடான இலங்கை கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார பாதிப்பில் எவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டது என்பதைப் பார்த்தோம்.
நமது மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்திலும் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் கூட தொடர்ந்து அதிகரித்து வருகிறது

வங்கதேசம்
இதனால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அங்கு எதிர்க்கட்சிகள் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களை முன்னெடுக்கும் வங்கதேச எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான தாரிக் ரஹ்மான், இந்து மதம் குறித்துக் கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்புவதாக உள்ளது. அவர் இந்து மத நூல்களை ஆபாச நூல்கள் என்று கேவலமான கருத்துகளைக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்
வங்கதேச எதிர்க்கட்சியான கோனோ ஓதிகர் பரிஷத்தின் தலைவர்களில் ஒருவரான தாரிக் ரஹ்மான், இந்து மத நூல்கள் எந்தவொரு தார்மீக போதனைகளையும் வழங்கவில்லை என்றும் அவை ஆபாச நூல்கள் என்றும் வேண்டுமென்ற சர்ச்சையைக் கிளம்பும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தாரிக் ரஹ்மான் அங்குள்ள மூன்றாம் அல்லது நான்காம் கட்ட அரசியல் தலைவர் இல்லை. தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் நூருல் ஹக் நூர் உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் தான் இவர்.

கேவலமான கருத்து
இப்படியொரு உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இந்து மதம் குறித்து இப்படியொரு சர்ச்சை கருத்தைக் கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பேஸ்புக் நேரலையில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "இந்து மதத்தின் வேதங்கள் எந்த தார்மீக போதனைகளையும் வழங்கவில்லை.. இதில் இருக்கும் அனைத்து மத நூல்களும் ஆபாச கருத்துகளையே கொண்டுள்ளது" என்று ரஹ்மான் கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்பு
கடந்த அக்டோபர் 2021இல் தொடங்கப்பட்ட இந்த கோனோ ஓடிகர் பரிஷத் கட்சி வங்கதேச அரசியலுக்கு ரொம்பவே புதியது. அதன் தலைவர்கள் அனைவரும் இளைஞர்களாகவே உள்ளனர். இதனால் பல சமயங்களில் அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இதுபோல சர்ச்சை கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதேநேரம் இந்தக் கட்சி பயங்கரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவாகச் செயல்படுவதாகவும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவும் அக்கட்சிக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடரும் பரபரப்பு
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் என்பது அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது. துர்கா பூஜை சமயத்தில் வங்கதேசத்தின் கொமிலா நகரில் குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதனால் அங்கு கடும் வன்முறை ஏற்பட்டது. இந்த மோசமான வன்முறையில் சிலர் கொல்லப்பட்டது. அதேபோல கடந்தாண்டு வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இஸ்கான் ராதாகாந்தா கோயில் மீது சில மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. அடிக்கடி இப்படி பதற்றமான சூழல் அங்கு ஏற்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரே இப்படிக் கூறியதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications