"சர்வ நாசம்.." ஈரானில் புல் பூண்டு கூட முளைக்காது.. 20 ஆண்டுகளாக இஸ்ரேல் போடும் சீக்ரெட் ஆப்ரேஷன்
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரானை முழுமையாகத் தாக்கி அழிக்கும் சில மோசமான ஆயுதங்களை இஸ்ரேல் தன்வசம் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகவே கடந்த 20 ஆண்டுகள் சீக்ரெட் மிஷன் ஒன்றை இஸ்ரேல் மேற்கொண்டு வந்துள்ளது.
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இது அந்த பிராந்தியத்தில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நேரத்தில் இஸ்ரேல் தனது அண்டை நாடான ஈரானை அழிக்கத் தயாராக உள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுக்காக மட்டுமே அந்நாடு ராணுவம் காத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் திட்டம்: தனக்குக் குடைச்சல் தரும் எந்தவொரு அண்டை நாட்டையும் காலி செய்ய இஸ்ரேல் கடந்த 20 ஆண்டுகளாக ஒரு சீக்ரெட் மிஷன் ஒன்றை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஈரான் நாட்டின் சில முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் எப்போது இந்தத் தாக்குதல் நடக்கும் எந்த இடங்கள் எல்லாம் லிஸ்டில் உள்ளன என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையே ஈரானை வீழ்த்த கடந்த 20 ஆண்டுகளாக இஸ்ரேல் போட்டுவைத்துள்ள சீக்ரெட் மிஷன் குறித்தும் இப்போது சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெருசலேம் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது. ஈரானை தாக்கி அழிக்க உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் இதுவரை பல பில்லியன் டாலரை செலவழித்துள்ளதாம். பல அதிநவீன மற்றும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் ஆயுதங்களை வாங்கியுள்ளது. இதில் சில ஏவுகணைகளை அதிநவீன ரேடார் மூலமாகக் கூட கண்டுபிடிக்க முடியாதாம். இவை நிச்சயம் ஈரானுக்கு தலைவலியாகவே மாறும்.
வலிமையான ஆயுதங்கள்: இஸ்ரேல் இந்த சில ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தபோது தான் இஸ்ரேலிடம் இந்தளவுக்குப் பயங்கரமான ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. அதேநேரம் இஸ்ரேலிடம் இன்னுமே கூட வலிமையான ஆயுதங்கள் பல இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் பெரும்பாலான ஆயுதங்கள் ஈரானைக் குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளியே லீக் ஆகாமல் இருக்கவும் இஸ்ரேல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதுபோன்ற ஒரு ஆயுதம் தான் பயன்படுத்தப்பட்டது. அதுவே ஈரானுக்கு கிட்டதட்ட ஒரு எச்சரிக்கை போலவே இருந்தது. மேலும், இஸ்ரேல் தங்களிடம் உள்ள F-15 போர் விமானங்களையும் ஈரான் மனதில் வைத்துக் கொண்டு மாற்றி வடிவமைத்துள்ளதாம். இதன் மூலம் ஈரானை இஸ்ரேலால் முழுமையாகத் தாக்கி அழிக்கக் கூட முடியும்.
ரொம்ப மோசமான ஏவுகணை: இவை எல்லாவற்றையும் தாண்டி ஜெரிகோ ஏவுகணை என்ற மிகவும் ஆபத்தான ஒரு ஏவுகணையையும் இஸ்ரேல் தன்வசம் வைத்துள்ளதாம். இருப்பினும், அந்த ஆயுதங்கள் குறித்த எந்தவொரு தகவலையும் இஸ்ரேல் பொதுவெளியில் அறிவிக்க மறுக்கிறது. இது தொலை தூரத்தில் உள்ள இலக்குகளையும் கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறமை கொண்டது.
மேலும், இஸ்ரேல் வசம் இருக்கும் குண்டுகள் பதுங்கு குழிகளைக் கூட உடைக்கும். இதை வைத்து ஈரானின் எண்ணெய் கிடங்குகளை தாக்கி அழிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆயுதங்களை எல்லாம் வைத்து ஒரே நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தினால் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும். அது அடுத்த உலகப் போரைக் கூட தொடங்க வாய்ப்பு இருப்பதாகவே அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications