10 நாட்களில் 143 பேர் பலி! காங்கோவில் பரவும் மர்ம நோய்! உலக நாடுகள் அதிர்ச்சி.. அடுத்த பெருந்தொற்றா?
காங்கோ: காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. கடந்த 10 நாட்களுக்குள் இந்த நோய் 143 பேரைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தின் துணை ஆளுநரான ரெமி சாகி மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் அப்பல்லினேர் யூம்பா ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

200க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களின் எச்சில் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து நோயை அடையாளம் காண பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக கிளைமேட் மாறுவதால் சீசன் காய்ச்சல் ஏற்படும். அது போல இந்த நோய் ஏற்பட்டு வருகிறது. இது காய்ச்சல் போல இருந்தாலும் காய்ச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. சிலருக்கு மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு,
சளி,
இருமல்,
அதிக காய்ச்சல்,
உடல்வலி,
தலைவலி,
தும்மல்,
மூக்கு அடைப்பு ,
தொண்டை புண்,
கண்களில் நீர் வடிதல்,
மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பலருக்கும் காய்ச்சல் ஏற்படுகிறது. சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது.
சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 1 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 1 வாரம் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் செல்கிறார்கள். அதாவது அவ்வளவு எளிதாக இந்த காய்ச்சல் குணமாவது இல்லை.
நேரம் செல்ல செல்ல உடல் மோசமாகி.. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு.. கடைசியில் மரணம் அடைகிறார்கள். கேட்க கொரோனா போல இருந்தாலும் கொரோனாவை விட இது மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே கடந்த 10 நாட்களுக்குள் இந்த நோய் 143 பேரைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மாதிரிகளை சேகரித்து நோயை அடையாளம் காண மருத்துவ குழு ஒன்று Panzi சுகாதார மண்டலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
குவாங்கோ மாகாணத்தின் Panzi சுகாதார மண்டலத்தில் நவம்பர் 10 மற்றும் நவம்பர் 25 க்கு இடையில் இந்த இறப்புகள் நிகழ்ந்தன. காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் இரத்த சோகை ஆகியவை அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சுகாதார பிரச்சனை: காங்கோவில் ஏற்கனவே mpox தொற்றுநோய் பரவி வருகிறது., இதன் விளைவாக 47,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1500 பேர் வரை பலியாகி உள்ளனர். இதற்கு இடையேதான் இப்போ மிக மோசமான புதிய நோய் அங்கே பரவிக்கொண்டு இருக்கிறது.
அங்கே நோயின் தோற்றத்தைக் கண்டறிந்து அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த புதிய நோய் பரவல் மற்றும் நடந்து கொண்டிருக்கும் mpox தொற்றுநோய் இரண்டையும் நிர்வகிக்க அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர்.
உலக சுகாதார மையம் இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அடையாளம் தெரியாத நோய் எது என்று தெரிந்து கொள்வதற்கான ஆராய்ச்சிகளை உலக சுகாதார மையம் மேற்கொண்டு வருகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications