நவம்பருக்குள் எபோலாவால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கும்: பகீர் எச்சரிக்கை
ஜெனிவா: எபோலா வைரஸை கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதத்திற்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 5 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர். அதில் 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில்,

எபோலா
எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மாதங்களில் வைரஸால் தாக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை வாரத்திற்கு மட்டும் நூறில் இருந்து ஆயிரங்களாக அதிகரிக்கும்.

நவம்பர்
போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் வரும் நவம்பருக்குள் எபோலாவால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள்.

3 நாடுகள்
தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால் வரும் நவம்ரில் கினியாவில் 5 ஆயிரத்து 925 பேரும், லைபீரியாவில் 9 ஆயிரத்து 939 பேரும், சியர்ரா லியோனில் 5 ஆயிரத்து 63 பேரும் எபோலா வைரஸால் தாக்கப்படுவார்கள். இந்த மூன்று நாடுகளில் மட்டுமே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்படுவார்கள்.

காய்ச்சல்
எபோலா காய்ச்சல் ஏற்பட்டால் அந்த நபர் சில நாட்களிலேயே இறந்துவிடுவார். எபோலா காய்ச்சல் ஏற்பட்டால் உடம்பு வலி, வாந்தி, பேதி, ரத்தப் போக்கு உள்ளிட்டவை ஏற்படும்.

கினியா
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெற்கு கினியாவில் பரவத் துவங்கிய எபோலா வைரஸ் ஆயிரக்கணக்கானோரை தாக்கியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications