Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவர்ச்சி + ஜாலி.. கண்ணை மறைத்த காமம்.. யாரந்த ஆண் நண்பர்.. இவரும் ஒரு பெண்ணா? ஃப்ரிட்ஜை திறந்தால்?

Subscribe to Oneindia Tamil

பிரஸ்ஸெலா: ஆண் நண்பருடன் ஜாலியாக இருக்க முடியவில்லை என்பதால், இந்த முடிவை எடுத்ததாக, போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார் ஒரு பெண்.

கொலை செய்துவிட்டு, இப்போதெல்லாம் அந்த சடலங்களை சுடுகாட்டில் புதைப்பது கிடையாது.. நேராக சடலத்தை கொண்டுவந்து ஃப்ரிட்ஜில்தான் வைத்துவிடுகிறார்கள் கொடூரர்கள்.. ஷ்ரத்தா கொலையில் தொடங்கி, தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டிருக்கிறது.

Why Did mother take this Sudden decision and what happened to her 9 year old daughter

ஷ்ரத்தாவை மொத்தம் 38 துண்டுகளாக வெட்டியிருந்தார் அவரது காதலன் அப்தாப்.. கொலை செய்து, வீட்டிற்குள்ளும், ப்ரிட்ஜிக்குள்ளும், வைத்திருந்ததுடன், நாய்க்கும் வீசியெறிந்திருந்தான்.. அதேபோல, மும்பையில் மனோஜ் என்ற எய்ட்ஸ்நோயாளி, 36 வயது சரஸ்வதி என்ற பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்ததுடன், அவரையே கொலையும் செய்திருந்தார்.

எலும்புகள்: சடலத்தை மீட்க போன போலீசாருக்கே தலையே சுற்றி வாந்தி வந்துவிட்டதாம். குக்கரில் வேகவைத்த மனித சதைகள் இருந்தன.. பாதி எரிந்த எலும்புகள் டப்பாக்களில் இருந்திருக்கின்றன.. மிச்ச உடல் துண்டுகள் பக்கெட்களில் கிடந்துள்ளன.. சில உடல் பாகங்களை மிக்சியில் போட்டு அரைத்துள்ளார்.. சில துண்டுகள் ஃப்ரிட்ஜ்ஜில் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த கொடுமைகளின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில், பிரேசில் நாட்டிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. அங்குள்ள சா பாலோ என்ற நகரில் வசித்து வருபவர் ரூத் ஃப்ளோரியானோ... இவருக்கு கல்யாணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஆனால், கணவரை பிரிந்துவிட்டார்.. தன்னுடைய 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்..

வெறுப்பு: நாளுக்கு நாள் இவருக்கு போதை பழக்கம் அதிகமாகி, ஒருகட்டத்தில் அந்த பழக்கத்திற்கு அடிமையாகவே மாறிவிட்டார்.. மேலும், கடந்த ஒரு மாத காலமாக புதிதாக ஒரு நபருடன் தகாத உறவிலும் இருந்து வந்திருக்கிறார்..

இவரது மகள்களுக்கோ, தாயின் நடத்தை பிடிக்கவில்லை என்றாலும், வேறுவழியின்றி தாயுடனே இருந்து வந்துள்ளார்கள்.. ஆனால், இவரது 3வது மகளுக்கோ, அப்பா மீது நிறைய பிரியம் வைத்திருப்பவர்.. அப்பாவும், அம்மாவும் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.. இவருக்கு 9 வயதுதான் ஆகிறது.. பெயர் அலனி சில்வா.

மிரட்டல்: தன்னுடைய அப்பாவும், அம்மாவும் பிரிந்து வாழ்ந்தது பிடிக்கவில்லை என்பதுடன், அடிக்கடி அப்பாவை பார்க்க வேண்டும் என்று அம்மாவிடம், எந்நேரமும் தொந்தரவு செய்து கொண்டேயிருப்பாராம். இதனால், ஆத்திரமடைந்து, மகளை அடித்துவிடுவாராம் ரூத். இனிமேல் அப்பாவை பற்றி பேசக்கூடாது என்று மிரட்டியும் வந்திருக்கிறார்.

இதனிடையே, கடந்த ஒரு மாத காலமாக, ஆண் நண்பருடன் சேர்ந்துகொண்டு, போதையில் விழுந்து கிடந்துள்ளார் ரூத்.. எந்நேரமும் பார்ட்டி, போதை, டேட்டிங் என்று ரூத் இருந்ததால், 3வது மகளை சரியாக கவனிக்காமலும் இருந்துள்ளார்.. ஏற்கனவே, அம்மா மீது கோபம் கொண்ட மகளுக்கு இன்னும் கோபம் அதிகமாகிவிட்டது.. அதனால், தன்னுடைய 2 அக்காவிடமும் சென்று, அம்மா தன்னை அடித்து துன்புறுத்தியது பற்றி அழுதுகொண்டே சொல்லி உள்ளார்.

3வது மகள்: இந்த விஷயம் தெரிந்து ஆத்திரமடைந்த ரூத், தன்னுடைய உல்லாச வாழ்க்கைக்கு, 3வது மகள் தடையாக இருப்பதாக நினைத்து, அவளை கொல்லவும் முடிவு செய்தார்.. இதற்காக, கடந்த மாதம் 15ம் தேதி காலையில், தூங்கி எழுந்த 3வது மகள், பல் துலக்கிக் கொண்டிருந்தாள்.. அப்போது, திடீரென கத்தியை எடுத்து வந்து, பின்னாலிருந்து மகளை சரமாரி கத்தியால் குத்திக்கொன்றுவிட்டார் ரூத்.

கொலை செய்ததுடன், அந்த உடலை எப்படி மறைப்பது என்று யோசித்தார்.. எந்த ஐடியாவும் அவருக்கு தோன்றவில்லை என்பதால், கூகுளில் "சடலத்தை மறைப்பது எப்படி" என்று தேடி கண்டுபிடித்து படித்தார்.. பிறகு, மகளின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்துவிட்டார்.. மேலும், தன்னுடைய வீட்டையும் காலி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அந்த ஃபிரிட்ஜை பேக் செய்து, தன்னுடைய ஆண் நண்பரின் வீட்டில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

போதைப்பொருள்: இதெல்லாம் அதே வீட்டில் இருந்த ஆண்நண்பரின் அம்மாவுக்கு தெரியாது.. திடீரென ஒரு பார்சால் ஃப்ரிட்ஜில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. ஒருவேளை தன்னுடைய மகன் போதை பொருள் ஏதேனும் வாங்கி வைத்திருக்கிறாரா? என்பதை அறிய, அந்த பார்சலை திறந்து பார்த்தார்.. அப்போதுதான், 3வது மகளின் சடலம் துண்டாக வெட்டப்பட்டிருப்பதை பார்த்து அலறினார். இதுகுறித்து உடனடியாக போலீஸுக்கும் தகவல் தந்தார்.

போலீசாரும் விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி, கொலை செய்த பெற்ற தாயையும் கைது செய்தனர்.. தன்னுடைய ஆண் நண்பருடன் ஜாலியாக இருப்பதற்கும், போதை பழக்கத்திற்கும் இடைஞ்சலாகவும் மகள் இருந்ததால், அவளை கொலை செய்ததாக வாக்குமூலம் தந்தார்.

பின்னர், கொலை மற்றும் போதை பொருள் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இப்போது, ரூத் ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்க, அங்கே 2 பெண்களும் தாய், தகப்பன் இல்லாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+