Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திணறடிக்கும் பலூச் போராளிகள்.. விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்.. புலம்பி தள்ளிய பாதுகாப்பு அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பலூச் போராளிகள் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் நாட்டு ராணுவம் பலவீனமாக இருப்பது உண்மை தான் என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பலூச் போன்ற மாகாணத்தைப் பாதுகாப்பது ரொம்பவும் சிரமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே பலூச் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிப், பலூசிஸ்தான் மாகாணத்தின் தங்கள் ராணுவம் பலவீனமாக இருப்பது உண்மை தான் என ஒப்புக்கொண்டுள்ளார்.

Why Pakistan Forces Are losing In Balochistan Minister Khawaja Asif give bizarre explanation

பலூசிஸ்தான்

பலூசிஸ்தானின் பரந்த நிலப்பரப்பால், அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் பாதுகாப்புப் படைகள் பலவீனமாக இருப்பதாக ஒப்புக்கொண்டார். பலூச் கிளர்ச்சியாளர்கள் ஒரே நேரத்தில் பல நகரங்களில் நடத்திய தாக்குதல்களில் 80 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்ட அரசுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டது. இது பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை பலம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருந்தது. இந்தச் சூழலில் தான் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

ஒப்புதல் வாக்குமூலம்

பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தில் பேசிய ஆசிப், "நமது நாட்டின் பெரிய மாகாணம் பலூசிஸ்தான். அதேநேரம் குறைந்த மக்கள்தொகை கொண்டதாக பலூசிஸ்தான் இருக்கிறது. அங்கு பாகிஸ்தான் படைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறது. அங்கு சமீபத்தில் பிரிவினைவாதிகள் 12 இடங்களில் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதல்கள், சமீப ஆண்டுகளில் மிக மோசமான பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தின. அதேநேரம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 177 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.

பின்னடைவு

பலூசிஸ்தான் மாகாணம் தான் பாகிஸ்தானின் நிலப்பரப்பில் 40 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. அதைக் கட்டுப்படுத்துவது மக்கள் நிறைந்த நகரத்தை விட மிகக் கடினம், பெரும் படைகளை நிலைநிறுத்த வேண்டும். எங்கள் படைகள் அங்குத் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படுகின்றன, ஆனால் இவ்வளவு பெரிய பரப்பளவைப் பாதுகாப்பதில் பாக். படைகள் ரீதியாகப் பலவீனமாக இருக்கின்றன.

இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற பலூச் விடுதலை ராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. தாக்குதல் மூலம் அப்பாவி மக்களைக் கொன்ற தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்" என்றார்.

குற்றச்சாட்டு

மேலும், பாகிஸ்தானில் இயங்கி வரும் சில குறிப்பிட்ட குற்ற கேங்குகளுக்கும் பிரிவினைவாதக் குழுக்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பலூச் ஆதரவாகச் செயல்படும் குற்றவாளிகள், ஒரு நாளைக்கு 4 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்கள் வரை எண்ணெய் கடத்தல் மூலம் சம்பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பலூசிஸ்தானில், பழங்குடித் தலைவர்கள், அதிகாரிகள், பிரிவினைவாத இயக்கங்கள் இடையே ஒரு மோசமான தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேநேரம் பலூசிஸ்தானுக்கு பாகிஸ்தான் போதிய நிதி ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டை ஆசிப் நிராகரித்தார். பலூசிஸ்தான் மாகாணம் பல ஆண்டுகளாக வளர்ச்சி கண்டுள்ளது என்றும் பாகிஸ்தானில் பலூசிஸ்தானில் தான் விட அதிக விமான நிலையங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

பலூசிஸ்தான்

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிரும் பலூசிஸ்தானில் பல காலமாகவே போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இயற்கை வளங்களால் நிரம்பி இருக்கும் பலூசிஸ்தான், தங்களைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன. கலாட் சமஸ்தானம் இணைக்கப்பட்ட பிறகு 1948, 1958-59, 1962-63, 1973-77, மற்றும் 2000கள் எனப் பல முறை கிளர்ச்சிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+