நேபாளத்தை முகலாயர்களால் தொட்டு கூட பார்க்க முடியலை.. காரணம் என்ன தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
காத்மாண்டு: இந்தியாவை முகலாயர்கள் சுமார் 331 ஆண்டுகள் ஆட்சி செய்த போதிலும், இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக உள்ள நேபாளத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அளவில் மிகவும் குட்டி நாடான நேபாளத்தை முகலாயர்களால் நெருங்க முடியாத காரணம் என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலையின் மடியில் அமைந்து இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளம், பள்ளத்தாக்குகளையும் மலைப்பகுதிகளையும் கொண்டதாகும். 2 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நேபாளத்தை கடந்த சில நாட்களாக ஜென் Z தலைமுறையினர் உலுக்கியுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைப்பு
சமூக வலைதள தடைக்கு எதிராக கொந்தளித்த ஜென் Z இளைஞர்கள், நாட்டில் நடைபெறும் ஊழல் அரசாங்கத்தையும் தூக்கி எறிந்தனர். மக்கள் போராட்டத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய கேபி சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நேபாளத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுக்கடங்காத வன்முறை தற்போது முடிவுக்கு வந்து, அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. நேபாளம் கடந்த சில நாட்களாக உலக அளவில் தலைப்புச் செய்தியாக மாறிய நிலையில், அந்த நாடு குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்களும் வெளியாகி வருகின்றன.
முகலாயர்களால் கைப்பற்ற முடியாத காரணம்
அந்த வகையில், 15 ஆம் நூற்றாண்டுகளில் தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை கைப்பற்ற முடிந்த முகலாயர்களால், நேபாளத்தை மட்டும் ஒருபோதும் கைப்பற்ற முடியாமல் போனது. அதற்கான காரணங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
நேபாளத்தின் இயற்கை கோட்டை போல இமயமலை அமைந்துள்ளது. உயரமான மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள், குறுகிய பாதைகள் அந்த நாடு கொண்டுள்ளது. முகலாயப் படையின் முக்கிய பலமே குதிரைப்படை, கனரக பீரங்கிகள் ஆகும். ஆனால், மலைப்பகுதிகளில் இவை பயனற்றதாகின. இதனால் நேபாளம் மீதான படையெடுப்பு என்பது மிகவும் முகலாயர்களுக்கு கடினமாக இருந்தது.
சமவெளிப் பகுதிகள் மீதே கவனம்
நேபாள கூர்க்கா வீரர்கள் கொரில்லா போரில் திறம்படச் செயல்பட்டனர். இது அவர்களின் சிறந்த தற்காப்பு முறையாக இருந்தது. முகலாயர்கள் கங்கை-யமுனை தோவாப் போன்ற வளமான பகுதிகளை விரும்பினர். வங்காளம், குஜராத், தக்காணம் போன்ற வர்த்தக பகுதிகள் முக்கியம். எனவே, அவர்களின் கவனம் சமவெளிப் பகுதிகள் மீதே இருந்தது.
நேபாளத்தின் கடினமான புவியியல், குறைந்த வளம் ஆகியவை அவர்களுக்கு பொருளாதார ரீதியாக கவர்ச்சியற்றதாக இருந்தது. திபெத்-இந்தியா வர்த்தகத்திற்கு நேபாளம் ஒரு முக்கியப் பாதையாக விளங்கியது. முகலாயர்கள் உறவுகளைப் பாதிப்பதற்குப் பதிலாக வர்த்தகத்திற்கு முன்னுரிமை அளித்தனர். இது ஒரு முக்கிய மூலோபாய முடிவாகும்.
ஒன்றுபட்டு எதிர்த்த நேபாளம்
நேபாளம் அப்போது பல சிறிய மாநிலங்களாகப் பிளவுபட்டிருந்தது. எனினும், வெளிநாட்டுப் படையெடுப்பின்போது அவை ஒன்றுபட்டு எதிர்த்தன. நேபாள மக்கள் இந்து, பௌத்த பாரம்பரியங்களுடன் ஆழமாக இணைந்தனர். வெளிநாட்டு முஸ்லிம் ஆட்சியை கலாச்சார அச்சுறுத்தலாகவே பார்த்தனர். இது அவர்களுக்கு ஒரு பெரும் உந்துதலாக அமைந்தது.
முகலாயர்கள் ஆப்கானியர், ஈரானியர், மராத்தியர் உடன் தொடர்ந்து சண்டையிட்டனர். கடினமான, குறைந்த லாபம் கொண்ட நேபாளம் அவர்களுக்கு முக்கியத்துவம் பெறவில்லை. இந்த காரணிகள் அனைத்தும் நேபாளத்தை முகலாயர் ஆதிக்கத்தில் இருந்து வெற்றிகரமாகப் பாதுகாத்தன. இவ்வாறு நேபாளம் ஒரு தனித்துவமான நிலப்பரப்பாக நிலைபெற்றது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications