"தொடரும் மர்மம்.." டாப் ராணுவ அதிகாரி தற்கொலை! வாயை திறக்க மறுக்கும் புதின்! ரஷ்யாவில் நடப்பது என்ன
ரஷ்யாவில் திடீர் திடீரென உயிரிழக்கும் ராணுவ அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யா பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் டாப் ராணுவ தலைகள் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் இப்போது புதின் அதிபராக உள்ளது அனைவருக்கும் தெரியும். ரஷ்யா ஜனநாயக நாடு என்று சொல்லப்பட்டாலும் கூட அங்கு பெயரளவுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும்.
புதின் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எப்போதுமே தேர்தலில் போட்டியிடுவார்கள். இதன் மூலம் என்ன நடந்தாலும் சுற்றிச் சுற்றி புதின் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தலைமை பொறுப்பிற்கு வருவார்கள்.

மரணங்கள்
அதேபோல புதினை எதிர்ப்பவர்களும் சத்தமில்லாமல் அரசியல் களத்தில் இருந்து நீக்கப்படுவார்கள். அவரை வெளிப்படையாக எதிர்த்த அலெக்ஸி நவால்னியை வெளிநாடுகளில் வைத்தே தீர்த்துக்கட்ட முயன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்தன. இதற்கிடையே உக்ரைன் போரை விமர்சித்த ரஷ்ய எம்பி மற்றும் அவரது நண்பர்கள், சமீபத்தில் இந்தியா வந்திருந்த போது அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தார்கள். இதுவே மிகப் பெரிய மர்மமாக இதுவரை இருந்து வருகிறது.

மரணம்
இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதித் துறைக்குத் தலைமை தாங்கிய ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி மரினா யாங்கினா திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 16 உள்ள ஒரு கட்டிடத்தில் 16ஆவது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். புதன்கிழமை அதிகாலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

யார் இவர்
58 வயதான அவர் உக்ரைன் போருக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதில் முக்கிய நபராக இருந்தார். அவர் ரஷ்யாவின் ஐந்து பட்டாலியன்களில் ஒன்றான மேற்கு ராணுவ மாவட்டத்தின் நிதி இயக்குநராகவும் இருந்தார்.. இவர் புதினின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்டார். போர் ரஷ்யாவுக்கு விரும்பியபடி செல்லாததால், இந்த பதவியில் இருப்போரை புதின் பல முறை மாற்றியுள்ளார். இந்தச் சூழலில் இப்போது மர்மமான முறையில் இவர் உயிரிழந்துள்ளது பல சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.

ராணுவம்
அவரது சில உடைமைகள் அதே கட்டிடத்தில் 16ஆவது மாடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் விஷயம் என்னவென்றால், அந்த கட்டிடத்தில் அவர் வசிப்பதில்லையாம். அவரது கணவர் மட்டுமே தனியாக அந்தக் குடியிருப்பில் இருந்துள்ளார். இப்போது அவரது சடலம் அங்கு கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதேபோல ரஷ்யாவின் மேற்கு ராணுவ மண்டலமும் தனது அதிகாரி ஒருவர் இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளது. இருப்பினும், அதைத்தாண்டி அவர்கள் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.

புதின்
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து பல ரஷ்யர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வரும் நிலையில், இப்போது மெரினா யாங்கினா அந்த பட்டியலில் இணைந்துள்ளார். சமீபத்தில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரஷ்ய ஜெனரல் மேஜர் ஜெனரல் விளாடிமிர் மகரோவ், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. தொடர்ந்து மர்ம மரணங்கள் நடந்தாலும் புதின் இது குறித்து வாய் திறக்கவில்லை.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் கடந்தாண்டு பிப். மாதம் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் உக்ரைன் போரில் ரஷ்யா கைகளே ஓங்கியிருந்தது. இருப்பினும், அதன் பிறகு 2022இன் இரண்டாம் பாதியில் ரஷ்ய பல இடங்களை இழக்க நேரிட்டது. உக்ரைன் படைகள் தாக்கியதால் பல இடங்களில் பின்வாங்கும் சூழலுக்கும் தள்ளப்பட்டது. போர் தொடங்கி வரும் பிப்ரவரி 24ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், அன்று பெரிய தாக்குதலை ரஷ்யா நடத்தலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications