டிரம்பை சந்திக்க வரும் புதினை கைது செய்ய திட்டம்? இது என்ன ரஷ்யாவுக்கு புதிய தலைவலி! பகீர் பின்னணி
மாஸ்கோ: உக்ரைன் போர் விவகாரம் குறித்து விரைவில் டிரம்ப்- புதின் ஆலோசனை நடத்தவுள்ளனர். இருப்பினும், புதினுக்கு சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதால் டிரம்பை சந்திக்க வரும்போது அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல் உள்ளது. உண்மையில் புதின் கைது செய்யப்படுவாரா.. அதற்கான வாய்ப்புகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்
உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் தரப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார். இன்னும் சில மாதங்களில் இரு தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.

பிடிவாரண்டு
இருப்பினும், இதில் சிக்கல் என்னவென்றால் கடந்த 2023ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக ஒரு பிடிவாரண்டு பிறப்பித்தது. உக்ரைன் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் உக்ரைன் குழந்தைகளைச் சட்டவிரோதமாக நாடுகடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளில் புதினுக்கு பிடிவாரண்டு வழங்கப்பட்டது.
இருப்பினும், சர்வதேச நீதிமன்றத்திற்குத் தனியாக போலீஸ் துறை இல்லை என்பதால் அவர்களுக்குக் கைது செய்யும் அதிகாரம்.. எனவே, கைது வாரண்டுகளை அமல்படுத்த உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படும். அதன்படி ஹங்கேரி மற்றும் அண்டை நாடுகளான செர்பியா, ருமேனியா உள்ளிட்டவை புதின் விமானம் தங்கள் வான்வெளிக்குள் நுழைந்தால், அவரை கைது செய்ய வேண்டும். ஹங்கேரி புதினைக் கைது செய்ய வேண்டும் என ஏற்கனவே ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது..
வாய்ப்பு குறைவு
அதேநேரம் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றே சொல்ல வேண்டும். ஹங்கேரி சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக இருந்தாலும், அந்நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பன் அதிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரலில் அந்த பிராசஸ் தொடங்கப்பட்ட நிலையில், அது முடிய ஒரு வருடம் ஆகும். இதனால், ஹங்கேரி சட்டப்படி புதினை கைது செய்ய வேண்டும்.
இருப்பினும், ஓர்பன் டிரம்ப்பின் ஆதரவாளராகவும், ரஷ்யாவுடன் நெருங்கிய உறவு கொண்டவராகவும் இருப்பதால், புதின் கைது செய்யப்படுவது சாத்தியமற்றது. ஹங்கேரி ஏற்கனவே புதினின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. போர்க் குற்றங்களுக்காகத் தேடப்படும் நெதன்யாகு கடந்த ஏப்ரல் மாதம் ஹங்கேரி வந்தபோதும் கூட அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் ஹங்கேரி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹங்கேரி
கடந்த சில நாட்களில், ஓர்பன் டிரம்ப் மற்றும் புதின் இருவருடனும் பேசியுள்ளார். மேலும், முக்கியமான சந்திப்புக்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளார். ஐரோப்பாவில் இத்தகைய சந்திப்பை தங்கள் நாட்டில் மட்டுமே நடத்த முடியும் என்பதை அவர் காட்ட விரும்புகிறார். இதனால் புதினை கைது செய்ய வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.! மேலும், 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஓர்பன் கட்சி மீது அந்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மோசமான பொருளாதாரம் காரணமாக அந்நாட்டு மக்கள் கோபத்தில் இருக்கும் நிலையில், அந்த கவனத்தைத் திசைதிருப்ப இந்தச் சந்திப்பு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
வரும் டிசம்பர் மாதம் டிரம்ப்பை சந்திக்க ஹங்கேரிக்கு வரப் புதின் ஒப்புக்கொண்டால், சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது இருக்கும். இருப்பினும், அவர் ஹங்கேரி வருவதும் அவ்வளவு ஈஸி இல்லை.. சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்ததில் இருந்து, புதின் தனது வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துள்ளார்.
இப்போது என்ன நிலைமை!
கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் டிரம்புடன் மீட்டிங் நடந்தது. ரஷ்யா அலாஸ்கா இடையே பெருங்கடல் மட்டுமே இருப்பதால் ஈஸியாக சென்று வந்துவிட்டார். ஆனால், ஹங்கேரி செல்ல பல தடைகள் உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தடைகள் காரணமாக, ரஷ்ய விமானங்கள் ஹங்கேரி உட்பட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் வான்வெளியில் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஐரோப்பிய ஒன்றியங்கள் நினைத்தால் விலக்கு தரலாம்.
இருப்பினும், போர் ஆரம்பித்தது முதலே ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு திட்டவட்டமாக ஆதரவு தந்து வருவதால் புதினை அனுமதிக்குமா என்பது கேள்விக்குறியே! ரஷ்யாவில் இருந்து ஹங்கேரிக்கு வர இப்போது 3 வழிகள் உள்ளன. ஆனால், அது எளிமையானது இல்லை.
மொத்தம் 3 வழிகள்
முதல் வழி பெலாரஸ் மற்றும் மேற்கு உக்ரைன் வழியாகச் செல்வது. இதன் மூலம் வெறும் 3 மணி நேரத்தில் ஹங்கேரி சென்றடையலாம். இருப்பினும், உக்ரைன் மீது புதின் செல்வது சாத்தியமே இல்லாதது. எனவே, புதின் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு அதிகம். இரண்டாவது வழி, பெலாரஸ் மற்றும் போலந்து வழியாக ஸ்லோவாக்கியா வழியாக ஹங்கேரிக்கு செல்வது.. இதற்கு ஐந்து மணி நேரம் ஆகும். பெலாரஸ் ரஷ்யாவுடன் நல்லுறவு கொண்டிருந்தாலும், போலந்து ஒரு சிக்கலாக இருக்கலாம்.
கடைசி வழி துருக்கி வழியாகச் செல்வது. இதற்கு கிரீஸ் வழியாக மத்தியதரைக் கடல் மற்றும் அட்ரியாடிக் கடல்களைக் கடந்து செல்லலாம். இதற்கு சுமார் எட்டு மணிநேரம் வரை ஆகும். இது சுற்று வழி என்றாலும் கூட இதுவே பாதுகாப்பான ஒரே வழி என்பதால் புதின் இந்த ரூட்டிலேயே டிரம்ப் சந்திக்கச் செல்வார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications