ஏமன் அதிபர் மன்சூர் ஹதியை சிறைபிடித்தனர் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்!
சனா: ஏமன் அதிபர் மன்சூர் ஹதியை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சிறைபிடித்துள்ளனர். அதிபர் மாளிகை உட்பட தலைநகர் சனா முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசமாகி உள்ளது. அதிபர் ஹதி ராஜினாஅமா
ஏமனில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து சர்வாதிகாரியாக இருந்த அலி அப்துல்லா சலே பதவி விலகினார். அவரை தொடர்ந்து அப்தராபுக் மன்சூர் ஹதி அதிபராக பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். அதிபர் ஹதியும் அவரது அமைச்சர்களும் ஊழலில் திளைத்து நாட்டை சுரண்டி வருவதாக குற்றம் சாட்டினர்.
இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அதை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய 7 நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த நிலையில் சனாவில் உள்ள அதிபர் மாளிகையையும் கடந்த சில நாட்களுக்கு முன் கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்தனர்.
அதிபர் மாளிகை மீது வெடிகுண்டுகளை வீசப்பட்டதால் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. அல் கொய்தாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவரான ஹதி, 'ஒட்டுமொத்த நாடும் முடங்கியுள்ளதால் அதிபராக தொடர விருப்பமில்லை என்றும், எந்த இலக்கை அடைவதற்காக இப்பதவியில் அமர்ந்தேனோ, அது நிறைவேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இம்முடிவை எடுக்க நேர்ந்ததெனவும் கூறினார்.
அந்நாட்டு நாடாளுமன்றத்தையும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசமாக்கி உள்ளனர். அதிபரைப் போல பிரதமர் காலித் பஹாஹ்ஹும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஏமன் நாட்டில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் பதவியில் தொடர தான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் ஹதியின் ராஜினாமாவை ஏற்க அந்நாட்டு நாடாளுமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications