Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீ ரொம்ப நாள் வாழ முடியாது.. ஹிஸ்புல்லா புது தலைவருக்கு நாள் குறித்த இஸ்ரேல்.. இறங்கி அடிக்குதே

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: ஹிஸ்புல்லா தலைவராக ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் தாக்குதலில் இறந்தார். இதையடுத்து ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நைம் காசிம் தேர்வு செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே இஸ்ரேல் அவருக்கு நாள் குறித்துள்ளது. அதாவது நைம் காசிமை நோக்கி நீண்டகாலம் வாழமாட்டாய். உன்னை தீர்த்து கட்டிவிடுவோம் எனக்கூறி அடுத்த டார்க்கெட்டை அவரை நோக்கி இஸ்ரேல் வைத்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் நீண்டகாலமாக மோதல் உள்ளது. இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி போராக மாறியது. தற்போது காசாவில் இருந்து இஸ்ரேல் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஓராண்டு கடந்த நிலையில் தொடர்ந்து போர் நடக்கிறது.

hezbollah israel naim kassem

இந்த ஹமாஸ் என்பது ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பாகும். இதனால் ஈரான், இஸ்ரேலை பழிவாங்க துடிக்கிறது. அதேபோல் இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவை வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒருபுறம் போர், இன்னொரு புறம் ஹிஸ்புல்லாவுடன் மோதல் என்று ஒரே நேரத்தில் இரு சண்டைகளை இஸ்ரேல் செய்து வருகிறது.

இஸ்ரேலின் இந்த மிரட்டல் தற்போது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இஸ்ரேல் தொடர்ந்து ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களின் தலைவர்களை ஸ்கெட்ச் போட்டு தீர்த்து கட்டி வருகிறது. இதனால் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள் தலைவர் இன்றி தவித்து வருகின்றன. இந்நிலையில் தான் ஹிஸ்புல்லா புதிய தலைவராக நைம் காசிம் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

ஹிஸ்புல்லா தலைவராக இருந்த அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லா கடந்த மாதம் 7ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து தான் நைம் காசிம் புதிய தலைவராகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த 30 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் துணை தலைவராக ஹசன் நஸ்ரல்லாவின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தலைவராகி உள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவிப்பு செய்துள்ளது.

இதற்கிடையே தான் நைம் காசிமுக்கு இஸ்ரேல் நாள் குறித்துவிட்டது. ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரேல் முக்கிய அறிவிப்பை மிரட்டலாக விடுவித்தது. இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் யோவ் காலன்ட், ‛‛கூடிய சீக்கிரமே நைம் காசிமின் கதையை முடிக்க போகிறோம். அவரால் நீண்டகாலம் வாழ முடியாது. அவரது கவுண்ட்டவுன் இப்போதே ஸ்டார்ட் ஆகிவிட்டது'' என மிரட்டல் விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த அறிவிப்பு என்பது தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது. ஏனென்றால் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களை தொடர்ந்து தீர்த்து கட்டுவோம் என்று வெளிப்படையாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் இஸ்ரேல் ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்களை குறிவைத்து சரியாக திட்டமிட்டு தீர்த்து கட்டியும் உள்ளது.

அதாவது ஹமாசின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து இஸ்ரேல் கொன்றது. குண்டு வீசி தாக்குதல் நடத்தி அவர் கொல்லப்பட்டார். அதோடு ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற இஸ்மாயில் ஹனியே இஸ்ரேல் திட்டமிட்டு வீழ்த்தியது. அதன்பிறகு அந்த அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வாரை காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ராஃபா நகரில் வைத்து கடந்த 16ம் தேதி இஸ்ரேல் கொன்றது.

அதற்கு சில நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த மாதம் 7ம் தேதி லெபனானின் பெய்ரூட்டில் வைத்து ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை ஏவுகணை தாக்குதல் மூலம் இஸ்ரேல் கொன்றது. மேலும் ஹசன் நஸ்ரல்லாவுக்கு பதில் புதிய தலைவராக பொறுப்பேற்க இருந்த ஹாசெம் சாஃபிதீன் என்பவரையும் அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் வீழ்த்தியது. இப்படியாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் 4 தலைவர்களை இஸ்ரேல் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளது.

இதற்கிடையே தான் தற்போது ஹிஸ்புல்லா தலைவராக தேர்வாகி உள்ள நைம் காசிமுக்கும் இஸ்ரேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் அவரது உயிரை எடுக்க இஸ்ரேல் துடித்து வருகிறது என்பது இந்த மிரட்டல் மூலம் உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+