இந்தியா மீதான வரிக்கு விலக்கு? முடிவுக்கு வருகிறது ரஷ்யா-உக்ரைன் போர்! வெளியான முக்கிய தகவல்
மாஸ்கோ: போரை நிறுத்த வந்த தேவ தூதனாக தன்னை காட்டிக்கொள்ளும் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தை மேற்கோளிட்டு இந்தியாவுக்கு வரி போட்டிருக்கிறார். இந்த வரிக்கு காரணமாக உக்ரைன்-ரஷ்யா விவகாரம் எப்போது முடிவுக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பான முக்கியமான அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது.
ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் விரைவில் நேரில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பு ஹங்கேரியில் நடக்க இருக்கிறது என்பதுதான் தற்போது கிடைத்திருக்கும் அப்டேட். பேச்சுவார்த்தையில் வேறு யாரெல்லாம் பங்கேற்பார்கள்? என்ன பேசப்படும்? தீர்வு எட்டப்படுமா? என்பது குறித்து இந்த செய்தி விவரிக்கிறது.

போருக்கான காரணம் என்ன?
உக்ரைனை நேட்டோவில் (NATO) இணைக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி விரும்புகிறார். நேட்டோ என்பது அமெரிக்கா தலைமையிலான ஆயுதப்படை. இதில் உக்ரைன் இணைவதால் அமெரிக்காவுக்கு சில சாதகங்கள் இருக்கின்றன. ஆனால் ரஷ்யாவுக்கு இது முழுக்க முழுக்க அச்சுறுத்தலாகும். எனவே நேட்டோவில் இணையக்கூடாது என ரஷ்யா பலமுறை வலியுறுத்தி இருந்தது. இருப்பினும் இதனை ஜெலன்ஸ்கிக்கு கேட்காததால், உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து இருக்கிறது.
அமெரிக்காவுக்கு என்ன சிக்கல்?
உக்ரைன்-ரஷ்யா இரண்டு வகைகளில் அமெரிக்காவை பாதித்திருக்கிறது. முதல் விஷயம் உக்ரைனில் உள்ள வளங்களை சுரண்ட முடியவில்லை. போர் தொடங்கியதற்கு பிறகு சுமார் 10.7% அளவுக்கு கனம மற்றும் இதர பொருட்கள் உக்ரைனிலிருந்து அமெரிக்காவுக்கு செல்வது குறைந்திருக்கிறது. அதேபோல எதிர்காலத்தில் அரிய காந்தங்களின் தேவை மிக முக்கியமானதாக இருக்கிறது. எனவே இந்த காந்தங்களை தயாரிக்க தேவையான கனிமங்கள் உக்ரைனில் இருக்கின்றன. ஆனால் போர் காரணமாக இதை எடுக்க முடியாமல் அமெரிக்கா திணறுகிறது.
இரண்டாவது விஷயம் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும். எனவே இந்த போரை நிறுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இந்தியா மீது கடுப்பு ஏன்?
மேலே சொன்ன இரண்டு விஷயங்களால்தான் இந்த போரை அமெரிக்கா மிகவும் கவனமாக கையாள்கிறது. ஆனால் இதில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. இந்தப் போரை நிறுத்த ரஷ்யா முழுமையாக உடன்பட வேண்டும். அல்லது ரஷ்யாவுக்கு கிடைக்குமா ஆதரவுகள் குறைய வேண்டும். அப்படி இருந்தால் போரை நிறுத்தும் நெருக்கடியை ரஷ்யாவுக்கு அமெரிக்காவால் கொடுக்க முடியும். ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய் விற்பதன் மூலமாக மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.
போர் முடிவடையுமா?
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதால் ரஷ்யாவுக்கு பெரிய அளவில் பண பலன்கள் கிடைக்கின்றன. இது போருக்காக அப்படியே திருப்பி விடப்படுகிறது. எனவே இந்த ஆதரவை நிறுத்த இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசோ இதை கேட்டுக் கொள்ளவில்லை. எனவே தற்போது இந்தியா மீது 50 சதவீதம் அளவுக்கு அமெரிக்கா வரியை போட்டிருக்கிறது.
இந்த வரி விஷயத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், போர் பஞ்சாயத்து முடிவடையும் கட்டத்தில் நெருங்கியுள்ளது.
அதாவது புதினும் ஜெலன்ஸ்கியும் விரைவில் நேரில் சந்தித்து பேச இருக்கின்றனர். இந்த சந்திப்பு ஹங்கேரியில் நடக்க இருக்கிறது. ஆனால் இந்த சந்திப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவேளை சந்திப்பு உறுதி செய்யப்பட்டு, பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் போர் முடிவடையும். இந்தியா மீதான வரியும் முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications