Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் பறக்குது பச்சை பந்தல்.. பசுமை நிழலில் இளைப்பாறும் காஞ்சி மக்கள்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: அனலடிக்கும் வெப்பத்தை ஓரளவாவது தணிக்கும் வகையில், சென்னையை போலவே, காஞ்சிபுரத்திலும் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடானது, வாகன ஓட்டிகளின் பெருத்த வரவேற்பினையும் பெற்று வருகிறது.

அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் தமிழக மக்களை மிரட்டி கொண்டிருக்கிறது.. இன்னும் 1 மாதத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளது தமிழ்நாடு.

Fantastic Steps Pasumai Pandhal Signal in Kancheepuram and Green Shaded Panthal at 4 places in Kanchipuram

வெயில்: காலை முதல் சாயங்காலம் வரை சாலைகளில் நடமாடவே அச்சப்படுகிறார்கள்.. எனவே, பகல்நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று தமிழக சுகாதார துறையும், டாக்டர்களும் தொடர்ந்து மக்களுக்கு அட்வைஸ் தந்து கொண்டேயிருக்கிறார்கள்.

இந்நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காக, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது... அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 பகுதிகளில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் முதல்கட்டமாக பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது..

ரிப்பன் மாளிகை: ரிப்பன் மாளிகை அருகே ராஜா முத்தையா சாலை ஈ.வெ.ரா. பெரியார் சாலை சந்திப்பு, திருமங்கலம் ரவுண்டானா சந்திப்பு, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை, 3-வது அவென்யூ சந்திப்புகளில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்படுகிறது.

அதேபோல, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் சேத்துப்பட்டு சந்திப்பு, அடையாறு எஸ்.பி.சாலை-மேற்கு அவென்யூ சாலை சந்திப்பு, திருவான்மியூர் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன.

இப்போது சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரத்திலும் பசுமை பந்தல் கொண்டுவரப்பட்டுள்ளது.. காஞ்சிபுரத்திலும், கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது.. அதுவும் மதியானம் நேரம் பைக்கில் போகவே முடியவில்லை.. வெப்ப அலை வாரி வாரி அடிக்கிறது.. அதனால்தான், வாகன ஓட்டிகளை, கடும் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் காஞ்சிபுரத்திலும் பசுமை பந்தல்கள் அமைத்துள்ளனர்..

நெரிசல் பகுதி: பஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள சிக்னல் சந்திப்பில், இந்த பசுமை நிழற்பந்தலை டிராபிக் போலீசார் அமைத்துள்ளனர்... இது எப்போதுமே பிஸியான, நெரிசல் மிகுந்த இடம் என்பதால், இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழல் கிடைக்கிறது.

அதேபோல, காஞ்சிபுரம் நகர கூட்டுறவு வங்கியிருந்து கச்சபேசுவரர் கோயில் செல்லும் சந்திப்பு, மூங்கில் மண்டபத்திலிருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலை சந்திப்பு, கச்சபேசுவரர் கோயில் முதல் நகர கூட்டுறவு வங்கி வரை என பேருந்து நிலைய சிக்னல் அருகில் 3 இடங்களில் இந்த பச்சை நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு: சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், வெயிலிலிருந்து தற்காலிகமாக தப்பிக்கவும், வெப்பஅலை தாக்கம் தங்கள் மீது தொடர்ந்து வீசாமல் இருக்கவும், இந்த சிக்னல் விளக்கு வழிகாட்டும் வரை அந்த இடத்தில் நின்று, கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு போகிறார்கள்.. போக்குவரத்து போலீஸாரின் இந்த பசுமை நிழல் பந்தல் ஏற்பாடுகளுக்கு, காஞ்சி மக்கள் பெரும் வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+