Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜான் பாண்டியன் அதிரடி.. அந்த "மேற்கு வாசல்" ஏன் மூடியே இருக்கு.. CM ஸ்டாலினை சந்திக்க போறாராம்..!

விரைவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முக்கிய கோரிக்கையை விடுக்க போவதாக ஜான் பாண்டியன் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மேற்கு வாசல் மூடியே இருக்கிறது.. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தொடங்கி நிகழ்மாதம் 8 ஆம் தேதி நிறைவு பெற்றது. அதே தினத்தன்று விடையாற்றி உற்சவம் தொடங்கியது.

இதன் நிறைவுநாளான நேற்றைய தினம், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் பூப்பல்லக்கில் மகிழம்பூ மாலைகள் அணிந்து பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 வாசல் மேற்கு

வாசல் மேற்கு

இந்த சிறப்பு தீபாராதனை நிகழ்வில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டார்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜான்பாண்டியன், "திருச்செந்தூர் கோயிலில் எங்களுக்கு பள்ளர் மடம் என்று மொத்தம் 16 மடங்கள் இருக்கின்றன.. நீங்கள் இப்போது திருச்செந்தூர் மேற்கு வாசலை பார்த்தீர்களானால் அது பூட்டப்பட்டிருக்கும்.. அது தேவேந்திர குல வேளாளருக்கு சொந்தமான மேற்கு வாசல் ஆகும். இன்றுவரை திருச்செந்தூர் கோயிலில், நாங்கள் கதிர் அறுத்து, இந்த மேற்கு வாசல் வழியாக எங்கள் சமூகத்தில் மூலம் நெற்கதிரை கடலில் கொட்டி, பொங்கல் வைத்து, அந்த பொங்கலை முருகனுக்கு சாத்தி, அந்த பொங்கலை எங்களுக்கு பிரசாதமாக பெற்றுக்கொள்வோம்.

 மேற்கு வாசல்

மேற்கு வாசல்

இதன் அடிப்படையில் நடக்கின்ற விழாதான், மேற்கு வாசல் விழா ஆகும்.. பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் உரிமை பறிக்கப்பட்டு தற்போது வரை, மேற்கு வாசல் திருவிழா நடைபெறாமல், மேற்கு வாசல் மூடியே இருக்கிறது இப்போதுவரை.. எனவே, இது தொடர்பாக முதலமைச்சரை ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போகிறோம்.. கிராம மக்களை அழைத்து சென்று உரிமைகளை பெறுவதற்காக பேசவிருக்கிறோம்.. நிச்சயம் இதற்கு விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

 80%

80%

கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, திமுக அபார வெற்றியை பெற்றதையடுத்து, அதுகுறித்து ஜான்பாண்டியன் தெரிவித்திருந்த கருத்துக்கள் அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை பெற்றிருந்தது.. செய்தியாளர்களிடம் அப்போது பேசிய ஜான்பாண்டியன்,"தேவேந்திர குலத்தினர் நன்றி உடையவர்கள். தேவேந்திரகுல வேளாளர்களுக்காக அரசாணை பிறப்பித்ததன் அடிப்படையில் நன்றியின் விசுவாசமாக 80% விழுக்காடு இந்த முறை பாஜகவிற்கு வாக்களித்து இருக்கின்றனர். அதே போல் யார் தேவேந்திர குல மக்களுக்கு நன்மை செய்தாலும், அதற்கு விசுவாசமாக நடப்பது தேவேந்திரகுல வேளாளர்களின் நிலை. அதன் அடிப்படையிலேயே இன்றைக்கு தமிழகத்தில் பிஜேபியின் நிலை உயர்ந்து இருக்கிறது.

 பெருத்த நம்பிக்கை

பெருத்த நம்பிக்கை

இதற்கு காரணம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் என்பதை தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் கட்சி என்று சொல்லும்பொழுது எப்படி வெற்றி பெற்றார்கள் என பத்திரிகைகளுக்கெல்லாம் தெரியும். விமர்சனங்களை நிறைய பார்த்திருப்பீர்கள். எந்த அடிப்படையில் வெற்றி பெற்றார்கள், மக்கள் தான் ஓட்டு போட்டார்களா? அவர்களாக ஓட்டு போட்டார்களா? அதிகாரிகள் ஓட்டு போட்டார்களா? என அவர்களுக்கு தான் தெரியும். திமுக 90% வெற்றி பெறுவார்கள் என்று அப்போதே மீடியாக்களில் சொன்னேன். காரணம் ஆளும் கட்சி. அவர்கள் கையில் எல்லாமே இருக்கிறது. அதனால் ஜெயித்து விட்டார்கள். மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகம். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியிருந்தார்.. இந்நிலையில், மேற்கு வாசல் திறப்பது தொடர்பாக முதல்வரை ஜான்பாண்டியன் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளது, மிகுந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+