காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி தேர்வு.. அட்சய திருதியை நாளில் தீட்சை.. சங்கர மடம் அறிவிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபயாக ஆந்திராவை பூர்விகமாக கொண்ட கணேச சர்மா டிராவிட் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி, விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தீட்சை வழங்கவுள்ளார் என்றும் சங்கர மடம் அறிவித்துள்ளது.
சங்கர மடம்
காஞ்சி சங்கர மடத்தின் தற்போதைய பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் இருந்து வருகிறார். பீடாதிபதி இருக்கும்போது அங்கு இளைய பீடாதிபதி தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தபோதே ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், அதன் பிறகு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

இளைய பீடாதிபதி
விஜயேந்திர சங்கராச்சாரியாருக்கு பிறகு யார் பொறுப்புக்கு வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஆந்திரா மாநிலத்தின் அன்னவரம் கிராமத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் பிரம்ம இளைய மடாதிபதியாக தேர்வு செய்யப்படுகிறார்.
அட்சய திருதியை
அனைத்து வேதங்களிலும் தேர்ச்சி பெற்ற கணேச சர்மா, தெலங்கானா மாநிலம், ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணியாற்றினார். அப்போதிருந்தே காஞ்சி பீடத்தின் ஆசியையும், அருளையும் பெற்றுள்ளார். அவருக்கு வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி, காஞ்சி சங்கர மடத்தில் அட்சய திருதியை நாளில் பீடாதிபதி விஜயேந்திர சுவாமிகள் தீட்சை வழங்க உள்ளார்." என்று கூறப்பட்டுள்ளது.
ஆந்திரா
இந்த அறிவிப்பு காஞ்சி சங்கர மட பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணேச சர்மா கடந்த 2001 ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீநிவாச சூர்ய சுப்ரமணியம். தாய் அலிவேலு மங்காதேவி ஆவர். அன்னவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்தியநாராயண சுவாமி கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
வேதம்
சர்மா கர்நாடகாவில் வேதக் கல்வியை பயின்றார். மேலும் ரிக்வேத அறிஞர் ஸ்ரீ கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரிடம் வேதம் மற்றும் சமஸ்கிருத கல்வி பயின்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு காஞ்சி பீட சங்கராச்சாரியார் தரிசனத்துக்கு சென்றனர். அங்கு கிடைத்த வழிநடத்துதலில் அவர் தொடர்ந்து வேதம் பயின்றார்.
பயிற்சி
பிறகு12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் கும்பகோணம் மகாமகத்தில், மீண்டும் சங்காரச்சாரியாரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து விஜயேந்திர சங்கராச்சாரியாரின் வழிநடத்துலில் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு, சங்கர மடம் சார்ந்த உற்சவங்களில் கலந்து கொண்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications