காஞ்சி சங்கர மடத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்து ஒரு வருடமாகிறது.. பக்தர்கள் ஏக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வந்து ஒரு ஆண்டாவதால் பக்தர்கள் ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடம் ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது. இந்த மடத்தின் 68 ஆவது பீடாதிபதியாக இருந்தவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் மகா பெரியவர், மகா பெரியவா என அழைக்கப்பட்டார். தெய்வத்தின் குரல் என்ற பெயரில் இந்து மதத் தத்துவங்களை எழுதியுள்ளார்.

1994 ஆம் ஆண்டு மகா பெரியவர் ஜீவசமாதி அடைந்தார். மகா பெரியவருக்கு பிறகு வந்த 69 ஆவது பீடாதிபதியாக வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் இந்த மடத்தில் 64 ஆண்டுகளாக தன்னை ஈடுபடுத்தி வந்தார். இவர் 2018ஆம் ஆண்டு காலமானதை அடுத்து 70ஆவது பீடாதிபதியாக இருப்பவர் விஜயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள்.
இவர்கள் அனைவருமே பொதுவாக சங்கராச்சாரியார் என்றே அழைக்கப்படுகிறார்கள். காஞ்சிபுரத்தில் பட்டுக்கு பெயர் பெற்றது என்றால் இங்கு காஞ்சி மடம் உலக புகழ் பெற்றது. காஞ்சிபுரத்திற்கு வருவோர் காஞ்சி சங்கர மடத்தை சுற்றி பார்க்காமல் செல்ல மாட்டார்கள். ஒவ்வொரு பண்டிகையின் போது சங்கராச்சாரியார் விஜயேந்திரர் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்.
அது போல் மகா பெரியவா ஜெயந்தி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழாக்களின் போதும் விஜயேந்திரர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக காஞ்சி சங்கர மடத்திற்கு விஜயேந்திரர் வருவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காஞ்சி சங்கரமட நிர்வாகிகளிடம் விசாரித்த போது சங்கரமடத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த ஓராண்டாக இல்லை என கூறுவது உண்மைதான். கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் தேதி விஜய யாத்திரையை தொடங்கி வைக்க ஸ்ரீ விஜயேந்திரர் இந்தியா முழுவதும் உள்ள சங்கர மடங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கும் முக்கிய கோயில்களுக்கும் யாத்திரை சென்றுள்ளார்.
காசி, அயோத்தி போன்ற இடங்களுக்கு சென்ற அவர் தற்போது சீதாபூர் என்ற இடத்தில் உள்ள நரசிம்மர் கோயிலில் பூஜைகளை முடித்துவிட்டு லக்னோவுக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் விஜயேந்திரர் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு எப்போது காஞ்சி மடத்திற்கு வருவார் என கேட்ட போது அது தெரியவில்லை. இந்த பயணம் முடியவே சுமார் 3 ஆண்டுகள் ஆகலாம். விஜயேந்திரரின் இந்த பயணத்தால் சங்கரமடத்தில் நடக்கும் பணிகள் தொய்வில்லாமல் இருக்கின்றன என தெரிவித்தனர்.

இதை அறிந்த பக்தர்கள் ஏக்கத்தில் காத்திருக்கிறார்கள். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு குலதெய்வத்திற்கு பத்திரிகை அனுப்பியதும் நேராக சங்கர மடத்திற்கு வந்து ஒரு பத்திரிகை வைப்பது பிராமணர்கள் பின்பற்றும் ஒரு பழக்கமாகும். அந்த சமயத்தில் விஜயேந்திரரை பார்த்து ஆசி பெற்றால் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். இதையெல்லாம் பக்தர்கள் மிஸ் செய்வதாக தெரிவிக்கிறார்கள்.
சிருங்கேரி சாரதா மடம், துவாரகை மடம், கோவர்தன மடம், ஜோஷி மடத்தின் தலைவர்களை போல் காஞ்சி மடாதிபதிகளும் சங்கராச்சாரியார் என அழைக்கப்படுகிறார்கள். தென் இந்தியாவில் உள்ள முதன்மையான இந்து சமய அமைப்புகளில் ஒன்றாக இந்த மடம் திகழ்கிறது. கும்பகோணத்தில் உள்ள ஒரு மடம் சிருங்கேரி சங்கர மடத்தின் கிளையாகும். காஞ்சி சங்கரமடத்தின் சார்பில் மருத்துவம், கல்வி உதவிகள் அளிக்கப்படுகிறது. அது போல் சென்னை நுங்கம்பாக்கத்தில் காஞ்சி காமக்கோடி மடத்தின் குழந்தைகள் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு குறைந்த செலவில் நிறைந்த சேவை அளிக்கப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications