சென்னையில் ஷாக்.. வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை கத்தரிக்கோலால் குத்திய மர்மநபர்கள்.. என்ன காரணம்?
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே பட்டப்பகலில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், பி.ஜி.அவென்யூ, 4 வது தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர் இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் மீனா(23), தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் மீனா மட்டும் தனியாக இருந்துள்ளார். இவர்களது வீட்டின் மேல் தளத்தில் கட்டுமான பனி நடந்து வருவதால் வேலைக்கு ஆட்கள் வந்துள்ளார்களா என்பது குறித்து கேட்க அவரது தாய் செல்போனில் தொடர்பு கொண்டபோது மீனா எடுக்காததால் அருகில் இருந்தவரை பார்க்க சொல்லி இருக்கிறார்.
வீட்டு இரும்பு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மரக்கதவு திறந்து இருந்தது உள்ளே பார்த்தபோது கத்திரிகோலால் கழுத்தில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மீனா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த மீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை செய்ததில் மீனா அணிந்திருந்த 2 பவுன் நகை மற்றும் செல்போன் காணவில்லை கட்டிட வேலைக்கு காலையில் வந்த நபர் வேறு ஒருவரை அழைத்து வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு அவரது செல்போனும் துண்டிக்கப்பட்டுள்ளது எனவே கொலைக்கான காரணம்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் கொலை செய்யப்பட்டு நகை பறித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications