கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காலில் செருப்பு கூட போடாமல்.. வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு.. தெரு தெருவாக செல்லும் பாஜக காந்தி!

நாகர்கோவில் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளை காந்தி ஆய்வு செய்தார்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: சும்மாவே காலில் செருப்பு போட மாட்டார் எம்எல்ஏ காந்தி.. இப்போது மழை வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்ய போயுள்ளார்.. அப்போதும் அதே வெள்ளை சட்டை, வேட்டி, காலில் செருப்பில்லாமல் ஆய்வு செய்ததை குமரி மக்கள் பெருமையாக பார்த்து செல்கிறார்கள்..!

அரசியல் லாப கணக்கில்... வேகமாக வளர்ந்து வரும் சோஷியல் மீடியா உலகில்... இளைஞர்கள் தலையெடுப்பு அதிகமாகி உள்ள அரசியலில்.. 75 வயசில் ஒருத்தர் தேர்தலில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் இல்லை.

 ஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேற ஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேற

அதுவும், இந்து, கிறிஸ்தவ சமுதாயத்தின் வாக்குகள் சரிவிகிதமாக உள்ள நாகர்கோவில் தொகுதியில் பாஜக வெற்றிபெறுவது என்பதும் அவ்வளவு எளிதல்ல.. இதை தான் முறியடித்து, வெற்றி பெற்றுள்ளார் காந்தி..

 காந்தி

காந்தி

இவர்தான் வேட்பாளராக என்று சொன்னதில் இருந்தே தொகுதி முழுக்க வீடு வீடாக நடந்தே சென்று ஆதரவு கேட்டு வந்தார்.. இன்று கன்னியாகுமரியை பாஜகவின் மண் என்று சொல்கிறார்கள் என்றால், அதற்கான விதையை அன்று போட்டு தந்தவர்தான் காந்தி..

 பாஜக

பாஜக

பாஜகவை சேர்ந்த ஒருவர்மீது, கட்சிக்கு அப்பாற்பட்டும் பொதுமக்கள் நேசிக்கிறார்கள் என்றார் அது காந்தியாகத்தான் இருப்பார்..! அநேகமாக பாஜகவிலேயே எளிமையான அரசியல்வாதி என்றால் அதுவும் காந்தியாகத்தான் இருப்பார். காலில் செருப்பு கூட போடமாட்டார்.. ஒரு வெள்ளை சட்டை, வேட்டி.. அவ்வளவுதான்.. இந்த டிரஸ்ஸூம் கசங்கிபோய்தான் இருக்கும்.. எளிமை & மூத்த தலைவர் போன்ற அனுதாபங்களே, இவருக்கு தொகுதியில் வெற்றியை பெற்று தந்தது.

 மக்கள்

மக்கள்

தொகுதியில் என்ன பிரச்சனை என்றாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் காந்தியை அணுகலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு எப்போதுமே இருக்கிறது.. அந்த வகையில், எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்ட மறுநாளில் இருந்தே தன்னுடைய தொகுதி மக்களுக்காகவே பாடுபட்டு வருகிறார் காந்தி..அந்த வகையில், இப்போது வெள்ள சேதத்தை நேரடியாக சென்று பார்வையிட்டு வருகிறார்.

 வெள்ளம்

வெள்ளம்

இந்த 2 நாட்களாகவே குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது... இதனால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.. மாவட்டம் முழுவதும் ஏராளமான வீடுகளில் வெள்ளம் புகுந்துவிட்டதால், பொதுமக்கள் தூங்கவே இல்லை.. விடிய விடிய தவித்து கிடந்தனர்.. கரண்ட்டும் இல்லை.. சாலையோரங்களில் மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன..

ஆய்வு

ஆய்வு

இப்படிப்பட்ட சூழலில்தான், காந்தி நாகர்கோவில் உள்ளிட்ட அனைத்து வெள்ள சேத பகுதிகளையும் நேரடியாகவே சென்று பார்வையிட்டார். சேரும், சகதியும், மழைநீரும், என சாலைகளில் தேங்கி கிடந்த நீரில் நடந்தே சென்று அனைத்து ஆய்வுகளையும் அதிகாரிகளுடன் மேற்கொண்டார்.. அவருடன் இருக்கும் அதிகாரிகள் ரெயின் கோட் உட்பட மழைக்கு பாதுகாப்பு டிரஸ்களை அணிந்துள்ளனர்..

 வெள்ள நீர்

வெள்ள நீர்

ஆனால், காந்தி அதே வெள்ளை - வேட்டி, காலில் செருப்பில்லாமல், பாதிக்கப்பட்ட இடங்களை நடந்தே சென்றே பார்வையிட்டார். ஏற்கனவே, நாகர்கோவில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு, பாதாள சாக்கடை திட்டம் போன்றவை தீராமல், கடும் சவால்களை தந்து வரும் நிலையில், மறுபடியும் வெள்ள நீரில் மாவட்டம் சூழ்ந்துள்ளது.. இதை காந்தி எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

English summary
BJP MLA Gandhi inspects the impact of rain floods in Nagarcoil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X