களத்தில் இருக்கும் ஒரு வீரனை பார்த்து இன்னொருவர் வீரன் பொறாமை கொள்வது சகஜம்தானே.. காங்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காங்கிரஸ் செயல்தலைவர் வசந்த குமார் பேட்டி-வீடியோ

    கன்னியாகுமரி: தேர்தல் களத்தில் ஒரு வீரனை பார்த்து மற்றொரு வீரன் பொறாமை கொள்வது சகஜமானதுதான். எனவே மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பேச்சும் அப்படித்தான் உள்ளது என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் செயல்தலைவர் வசந்த குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிருஸ்தவ கல்லூரி மைதானத்தில் வைத்து வரும் 13 ஆம் தேதி காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சார தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

     Congress criticises Pon Radhakrishnan

    இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதனிடையே பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தேசிய சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர்.

    மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர், நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் கூறும் போது வரும் 13 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, ஸ்டாலின் உட்பட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனரd.

     Congress criticises Pon Radhakrishnan

    இந்த பொதுக்கூட்டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள், காங்கிரஸ் கூட்டணியை மத்திய இணை அமைச்சர் பொன்னார் குறை கூறி வருகிறார். தேர்தல் களத்தில் ஒரு வீரனை பார்த்து மற்றொரு வீரன் பொறாமை கொள்வது சகஜம் தான் பொன்னாரின் பேச்சும் அப்படித்தான் உள்ளது என தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+