குமரியில் விடாது பெய்யும் மழை.. தென்மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழைக்கு வாய்ப்பு!
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே வருவதால் தற்போது தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே வருவதால் தற்போது தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தொடர்ந்து வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.

இந்த புயலுக்கு ஃபனி புயல் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த புயல் வடதமிழகத்தை தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் முழுக்க கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இந்த நிலையில் தற்போது தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் தக்கலை, திங்கள் சந்தை, மார்த்தாண்டம், குமரக்கோவில் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications