கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகையை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டரே அதை அபேஸ் செய்ததாக பரபரப்பு புகார்

கோட்டாறு இன்ஸ்பெக்டர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: திருட்டு போன நகையைக் கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் ஒருவர், அதைப் பார்த்து ஆசை கொண்டு அப்படியே அபேஸ் செய்து தற்போது மாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை கல்லுக்கட்டி பகுதியை சேர்ந்தவர் வேதவியாசன். தூத்துக்குடியில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2011-ம் வருஷம் இவர் வீட்டில் ஒரு கொள்ளை நடந்துவிட்டது. அப்போது வீட்டிலிருந்த நகை, பணம் எல்லாத்தையுமே மர்மநபர்கள் திருடி கொண்டுபோய் விட்டார்கள்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

அதனால் காணாமல் போன நகையை கண்டுபிடித்து தரும்படி களியக்காவிளை போலீசில் வேதவியாசன் புகார் அளித்தார்.

கோர்ட்டில் வழக்கு

கோர்ட்டில் வழக்கு

பிறகு "களியக்காவிளை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்த அன்புபிரகாஷ்தான், கொள்ளை போன நகைகளை மீட்டுவிட்டார் என்றும் ஆனால் மீட்ட நகையை தன்னிடம் இன்ஸ்பெக்டர் தரவில்லை" என்றும் கூறி நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு போட்டார்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 3-ம் தேதி இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மீது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

தற்போது கோட்டாறு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார் அன்புபிரகாஷ். இன்ஸ்பெக்டர் மீதே லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ள விவகாரம் காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
FIR filled against Kottaru Inspector Anbuprakash. Because Inspector has not been handed over to confiscated jewels to owner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X