கன்னியாகுமரியே ஆடிப்போச்சு.. மாமியார் வீடு விருந்து.. உடனே ஃபேனில் மாட்டிய தொங்கிய "சாந்தி துப்பட்டா".. ஹயோ

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியே அதிர்ச்சியில் உறைந்து காணப்படுகிறது.. நாகர்கோவில் இளைஞரின் இந்த முடிவு பலருக்கும் துயரத்தையும் தந்து வருகிறது.

நாகர்கோவிலை அடுத்த குளச்சல் அருகே உள்ளது உடையார்விளை.. இங்கு வசித்து வருபவர் தினேஷ் பாபு.. இவருக்கு 31 வயதாகிறது.. தையல் ஆரி (டெகரேஷன்) ஒர்க் வேலை செய்து வருகிறார்.. இதற்காக, இதே பகுதியில் ஒரு அப்பார்ட்மென்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து தொழிலாளர்களை வைத்து இந்த வேலையை செய்து வருகிறார்.

Kanniyakumari Nagercoil Businessman

காதல்: இவர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணை காதலித்தார்.. சாந்தியும் தினேஷை அதிகமாகவே நேசித்தார்.. இதையடுத்து, கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், தினேஷ் பாபுவுக்கு திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. அதனால், தொழிலை விருத்தி செய்வதற்காக ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.. கடன் வாங்கியும்கூட, பிசினஸில் லாபம் கிடைக்கவில்லை.. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் தினேஷ்.. இதற்கு நடுவில், மனைவி சாந்திக்கும் உடல்நலம் குன்றிவிட்டது.. அதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய அம்மா வீட்டிற்கு சிகிச்சைக்காக சென்று விட்டார் சாந்தி.

மாமியார்: தினேஷ்பாபுவிற்கு நேற்றுமுன்தினம் 31-வது பிறந்த நாளாகும்... எனவே, மதியம் மாமியார் வீட்டுக்கு சென்றார் தினேஷ்.. பிறந்தநாள் என்பதால், மாமியார் வீட்டிலேயே உணவு சமைக்கப்பட்டது.. ஸ்பெஷல் கேக் ஒன்று ஆர்டர் செய்யப்பட்டது..

கேக் வெட்டி, மனைவிக்கு முதல் கேக் ஊட்டினார் தினேஷ்.. மாலை வரை பிறந்தநாள் கொண்டாடிவிட்டு, காலையில் வேலை இருப்பதாக சொல்லி, சாயங்காலமே உடையார்விளைக்கு திரும்பிவிட்டார்..

அப்பார்ட்மென்ட்: நேற்று காலை தினேஷூக்கு போன் செய்துள்ளார் சாந்தி.. ஆனால், தினேஷ் செல்போனை எடுத்து பேசவில்லை.. இதனால் உறவினர்கள் உடையார்விளை அபார்ட்மெண்ட்டுக்கு வந்து பார்த்தனர்.. தினேஷ் பாபு தங்கியிருந்த அறையின் கதவும் திறக்கப்படவில்லை.. உடனே ஜன்னல் வழியாக பார்த்தபோதுதான், பிணமாக கிடந்தார் தினேஷ்..

கடன் தொல்லையால் மனமுடைந்து காணப்பட்ட நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் தினேஷ்.. ஃபேனில் சாந்தியின் துப்பட்டாவிலேயே தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.. 10 லட்சம் ரூபாய் கடன் பாக்கியுடன், தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் சம்பள பாக்கியை வைத்திருந்தாராம் தினேஷ்..

பரிதாபம்: மனைவியின் வீட்டிற்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, பிறந்த நாளின்போது மனைவிக்கு கேக் ஊட்டிவிட்டு, அன்றைய தினமே தினேஷ் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.. தினேஷின் சடலம் தற்போது போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+