Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PMFBY: ரூ.716 கட்டினால் ரூ.35800 கிடைக்கும்.. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இவ்வளவு பலனா?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னிப்பூ பருவ நெற்பயிர்களுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம் என்ற கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் மத்தியப் பிரதேசம் சேகோரில் தொடங்கப்பட்டது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கைச் செய்யப்பட்ட பயிர்களுக்கு உதவி வேளாண் அலுவலர்களால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

Kanyakumari District Collector Sridhar invited to enroll in Prime Minister Insurance Scheme

அதன்பிறகு, சராசரி விளைச்சல் விவரங்கள் கணக்கிடப்பட்டு, வறட்சி, வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும்போதும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக திட்டமாக இருக்கிறது.

பயிர் காப்பீடு செய்த பின்ர் ஏதாவது ஒரு சம்பவம் காரணமாக பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அது குறித்து, பயிர் காப்பீடு திட்ட ஆப்பில், 72 மணி நேரத்துக்குள் விவசாயிகள் தெரிவிக்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின் அந்த பகுதியில் உள்ள வேளாண் அதிகாரி, ஆய்வு செய்து இழப்பீட்டு பயன்களை தகுதியான விவசாயிகளின் வங்கி கணக்கில் மின்னணு முறையில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுப்பார். மாநில அளவில் / மாவட்ட அளவில் உள்ள குறை தீர்ப்பு குழு மூலம், விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்க இத்திட்டம் உதவுகிறது.

நில ஆவணங்களை, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைப்பது, எளிதான பதிவுக்கு பயிர் காப்பீடு கைப்பேசி செயலி, காப்பீட்டுக்கான ப்ரீமியம் செலுத்தும் வசதி, மானியம் விடுவிப்பு, இழப்பீடு வழங்கும் முறை ஆகியவை பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

இந்நிலையில் கன்னிப்பூ பருவ நெற்பயிர்களுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம் என்ற கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "குமரி மாவட்டத்தில் 2024-ம் ஆண்டில் கன்னிப்பூ பருவத்தின் நெற்பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனமான இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள்-தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு கன்னிப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.716 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. கன்னிப்பூ நெற்பயிருக்கான தொகை ஏக்கருக்கு ரூ.35,800 ஆகும். விவசாயிகள் முன்கூட்டியே காப்பீட்டு தொகையினை செலுத்தி பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+