Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் ரமணி இருந்த கோலம்.. அரசு ஊழியர் செய்த நம்பிக்கை துரோகம்.. சிக்கிய உருக்கமான கடிதம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சேர்ந்த ராணி என்ற கணவனை இழந்த பெண், சிறிய கடை ஒன்றை நடத்தி தனது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு கன்னியாகுமரி கலெக்டர் ஆபீஸில் மனு கொடுக்க வந்த போது, ஒரு அரசு ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். ஆனால் திருமணம் செய்வதாக கூறி, நகை, பணத்தை அபகரித்த அரசு ஊழியர் அவரை ஏமாற்றினாராம். இதனால் ராணி எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.

கணவனை இழந்த பெண்கள் சிலரை, சில ஆண்கள் ஆறுதல் கூறுவதாக கூறி பழகுகிறார்கள். அவர்களுக்கு வேண்டிய சிறு சிறு உதவிகளை செய்கிறார்கள். அப்படி உதவி செய்யும் ஆண்களிடம் பழக்கமாகும் சில பெண்கள் படிப்படியாக அவர்களின் வலையில் விழுந்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில், அவருக்கு திருமணம் ஆன விஷயம் தெரியவரும் போது ஏமாறுகிறார்கள்.

Kanyakumari Government employee who cheated by promising marriage What is Ramani s decision

கன்னியாகுமரி அரசு ஊழியர்

அதேபோல் திருமணம் ஆகாத நபராக இருந்தால் திருமண ஆசை காட்டி ஏமாற்றுவதும் நடக்கிறது. அதிலும் சில பெண்கள் ஏமாறுகிறார்கள். அப்படித்தான் கன்னியாகுமரியில் நடந்துள்ளது. திருமணம் செய்வதாக கூறி அரசு ஊழியர் ஏமாற்றியதோடு நகை, பணத்தையும் அபகரித்ததால் மனமுடைந்த பட்டதாரி பெண் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கணவனை இழந்த ரமணி

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சேர்ந்த அஜிகுமார் என்பவருடைய மனைவி ரமணிக்கு 41 வயது ஆகிறது. இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஜிகுமார் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து வீட்டின் அருகில் ரமணி சிறிய கடை ஒன்றை வைத்து நடத்தி வாழ்ந்து வந்தார்.


ரமணி இருந்த கோலம்

இந்நிலையில் ரமணி நேற்று காலையில் வீட்டில் அருந்தவே கூடாத ஒரு மருந்தினை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கடிதம் சிக்கியது

இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமணி கடைசியாக எழுதி வைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தான் அரசு ஊழியர் விவகாரம் அம்பலமானது.

அரசு ஊழியர்

கணவனை இழந்த ரமணி, அரசு வேலை கேட்டு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கருணை மனு கொடுத்துள்ளார். அப்போது அந்த மனுவில் இருந்த தனது செல்போன் எண்ணை எடுத்தாராம் அங்கு பணியாற்றிய ஒரு அரசு ஊழியர். அவர் ரமணிக்கு அடிக்கடி பேசி காதல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

ஒரு கட்டத்தில், தனக்கு திருமணமாகி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது என்றும் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகளை கூறினாராம். இதனை அவரை கண்மூடித்தனமாக நம்பி விட்டாராம் ரமணி. இந்த நம்பிக்கையால், அவர் கேட்ட தங்க நகை மற்றும் பணத்தையும் ரமணி கொடுத்தாராம். திருமணம் செய்து கொள்வதாக சத்தியமும் அந்த அரசு ஊழியர் செய்தாராம்.

திருமணத்தால் முடிவு

ஆனால் ரமணிக்கு தெரியாமல் கடந்த மே மாதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ரமணி, இதுபற்றி கேட்டதால் அவர் மற்றும் அவருடைய உறவினர்கள் தகாத வார்த்தைகள் பேசி ரமணியை மிரட்டினார்களாம். எனவே இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கிறாராம் ரமணி. இந்த தகவல் கடிதத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமணியின் தந்தை ஜார்ஜ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மகளுக்கு தந்தைக்கு கடிதம்

இதனிடையே தனது தந்தை மற்றும் மகளிடம் மன்னிப்பு கேட்டும், ரமணி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அப்பா, எனது மகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் மனம் தாங்க முடியாமல் இந்த முடிவை எடுக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் இறந்த பிறகு என் இறப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை வாங்கி கொடுங்கள். மகளே, என்னை மன்னித்து விடு. உன்னை நல்ல முறையில் வளர்க்க அம்மாவுக்கு ஆசை. ஆனால் இவர்கள் என்னை தொந்தரவு செய்கிறார்கள். என்னால் முடியவில்லை " என்று கூறியுள்ளார்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+