கன்னியாகுமரியில் பெண் குளிப்பதை 2 வருடமாக பார்த்து ரசித்த ராணுவ வீரர்.. உல்லாசத்துக்கும் அழைப்பு
கன்னியாகுமரி: ராணுவ வீரர்கள் என்பவர்கள், வெறும் இந்திய அரசு பணியாளர் மட்டுமே கிடையாது.. இந்த தேசத்தையே தன்னுடைய தோளில் சுமக்கும் மாவீரர்கள்.. அதனால்தான், ராணுவ வீரர் என்ற பெயரை சொன்னதுமே, ராணுவத்தில் அவர்கள் எந்தவிதமான பணியில் உள்ளார்கள் என்பதைகூட யோசிக்காமல், இன்றுவரை வற்றாத மரியாதையை தந்து கொண்டிருக்கிறோம். ஆனால், தன்னுடைய பதவி, பொறுப்பை மறந்து, ஒரு ராணுவ வீரர் தற்போது செய்திருக்கும் காரியம் அதிர்ச்சியை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மானத்தையும் சேர்த்து வாங்கியிருக்கிறது. என்ன நடந்தது தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 35 வயதாகிறது.. அதே பகுதியில் செயல்பட்டு வரும் வலை கம்பெனியில் வேலை செய்து வருகிறார்... இந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவன், 2 பிள்ளைகள் உள்ளனர்.

ராணுவ வீரர்
இந்த பெண்ணின் உறவினர் மதுராஜா என்பவர் ராணுவத்தில் உள்ளார்.. வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் இந்த மதுராஜா.. 35 வயதாகிறது.. மிசோரம் மாநிலத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் மதுராஜா ஊருக்கு வரும்போதெல்லாம், உறவினர் என்ற முறையில் அந்த பெண்ணின் வீட்டுக்கும் சென்று வருவது வாடிக்கையாகும்.
இந்நிலையில், கடந்த 2023ல் அந்த பெண் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்திருந்தார்.. இந்த புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக மதுராஜா வந்து சென்றார்.. அப்போது புது வீட்டின் பாத்ரூமில் ரகசிய கேமராவை பொருத்தி வைத்துவிட்டார்.. இந்த கேமிரா லிங்கை தன்னுடைய செல்போனிலும் பொருத்திக் கொண்டார்.. பிறகு கிரகிப்பிரவேசம் முடிந்ததுமே மிசோரம் மாநிலத்துக்கு டியூட்டிக்கு சென்றுவிட்டார்.
2 வருடங்களாக அக்கிரமம்
பாத்ரூமில் கேமரா இருப்பதை அப்பெண் அறியாமலேயே குளித்து வந்துள்ளார்.. இந்த 2 வருடங்களாகவே, மிசோரத்தில் டியூட்டியில் இருந்துகொண்டே, பெண்ணின் வீட்டின் குளியலறையிலிருந்த கேமரா மூலம் லிங்க் செய்யப்பட்ட தன் செல்போனில் அவர் குளிப்பதை கண்டு ரசித்து வந்துள்ளார்..
இந்நிலையில், சமீபத்தில் மதுராஜா சொந்த ஊருக்கு வந்துள்ளார்.. வழக்கம்போல் அந்த பெண்ணையும் சந்திக்க சென்றுள்ளார்.. அப்போது தன்னுடைய செல்போனில் பதிவாகியிருந்த குளியலறை காட்சிகளை அப்பெண்ணிடம் காண்பித்து, தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்..
கொந்தளித்து போன பெண்
இந்த வீடியோவை கண்டதுமே, அப்பெண்ணுக்கு தூக்கி வாரிப்போட்டது.. ராணுவ வீரரின் நிபந்தனைக்கு கட்டுப்பட மறுத்தார்.. அதற்கு மதுராஜா, தனக்கு ஒத்துழைக்காவிட்டால், நிர்வாணமாக குளிக்கும் படங்களை சோஷியல் மீடியாவில் பரப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். அப்போதும் அந்த பெண், மதுராஜாவின் விருப்பத்துக்கு இணங்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மதுராஜா, பெண்ணின் குளியல் போட்டோக்களை தன்னுடைய நண்பர்கள் சிலரிடம் காண்பித்ததாக தெரிகிறது..
இதையறிந்த அந்த பெண், ஈத்தாமொழி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மதுராஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள்.
மானமே போச்சு
தேசபக்தி என்பது நாம் வாழும் இடம், நகரம், மாவட்டம், மாநிலம், இப்படி எங்கு இருக்கிறோமே, அந்த மக்களிடையே சகிப்புத்தன்மையை வளர்ப்பதும், அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்வதிலும்தான் அடங்கி உள்ளது.. இதுவே ஜனநாயக தன்மையாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும், பெண்கள் உட்பட அனைத்து தரப்பிலும் கண்ணியத்துடன் வாழ உதவுவதே தேசபக்தி..
எத்தனையோ ராணுவ வீரர்கள் , சகமனிதனுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை சந்தோஷங்களை கூட தனக்குள்ளே அழுத்தியும், அமுக்கியும் வைத்து கொண்டு, தன்னை மெழுகாக உருக்கி கொண்டும், உயிரை கொடுத்து கொண்டிருக்கும் எல்லையில் பாடுபட்டு வரும்போது, மதுராஜா போன்றோரும் ராணுவத்தில் பணிபுரிவது அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications