வாடகை வீட்டில் கன்னியாகுமரி மனைவி போட்ட ஆட்டம்! யாருமே செய்யக்கூடாத சம்பவம்! பாவம் அருமனை குழந்தைகள்
கன்னியாகுமரி: சமீப காலமாகவே கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குடும்ப வன்முறைகளும் பெருகி வருகின்றன. இதனால் ஏற்படும் குடும்பத் தகராறுகள், இறுதியில் உயிரிழப்புகள் வரை கொண்டு போய் விட்டு விடுகின்றன. இதன்காரணமாக தம்பதிகளின் பச்சிளம் குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்து, எதிர்காலத்தையே தொலைக்கும் நிலைமைக்கு ஆளாகி விடுகிறார்கள். அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
அருமனை அருகே உள்ளது புண்ணியம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாய்.. மக்காடு மஞ்சாலுமூடு பகுதியில் சுந்தரபாய் தற்போது வசித்து வருகிறார்.

இவருக்கு பிந்து என்ற 34 வயது மகள் இருக்கிறார். பிந்துவுக்கு ஜெயக்குமார் என்பவருடன் 15 வருடங்களுக்கு முன்பே திருமணமாகிவிட்டது.. மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.
2வது திருமணம்
இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.. ஆனால், மகனுக்கு 10 வயது இருக்கும்போதே, ஜெயக்குமார் உயிரிழந்துவிட்டார்.. இதனால் பிந்து, மருதம்பாறையை சேர்ந்த வின் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறாள்.. தற்போது இந்த பெண் குழந்தை எல்கேஜி படித்து வருகிறாள்.
இந்நிலையில், 2வது கணவருடனும் கருத்து வேறுபாடுகள் பிந்துவுக்கு வெடித்தது. இதனால் தினந்தோறும் தம்பதிக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. ஒருகட்டத்தில் எரிச்சலடைந்த பிந்து, பிந்து 2வது கணவரையும் பிரிந்து மகன், மகளுடன் தன்னுடைய அம்மா வீட்டுக்கே சென்று விட்டார்.
அம்மா வீட்டுக்கு பக்கத்தில் தொழிலாளி ஒருவர் வசித்து வந்துள்ளார்.. பக்கத்து வீடு என்பதால், பிந்துவுக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் நட்பு ஏற்பட்டு, இதுவே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது..
ஆனால் அந்த தொழிலாளிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 பிள்ளைகள் உள்ளனர்.. இந்த 2 பிள்ளைகளுமே காலேஜ் படிக்கிறார்களாம்.
வாடகை வீட்டில் கொடுமை
தன்னுடைய கணவரின் நடத்தையை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, கணவரை கண்டித்துள்ளார்.. ஆனால், பிந்துவின் காதலில் மூழ்கிய தொழிலாளி, பிலாங்தோட்டவிளை ஆர்சி சர்ச் சாலையில், தனியாக ஒரு வீட்டையே வாடகைக்கு எடுத்து, அங்கு பிந்துவுடன் வந்து குடும்பம் நடத்த துவங்கினார்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளியின் மனைவி, கணவர் மீது கடையால் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் இந்த புகாரின் பேரில் தொழிலாளியை அழைத்து விசாரித்து கண்டித்தனர். இதனால் தன்னுடைய மனைவி, 2 பிள்ளைகளிடமே சென்றுவிட்டார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பிந்து, தொழிலாளியிடம் சென்று தனக்கு நியாயம் கேட்டுள்ளார்.. தன்னுடனே வந்துவிடுமாறும் அழைத்துள்ளார். இதற்கு தொழிலாளி மறுப்பு தெரிவித்துள்ளார்.. தன்னுடைய மனைவி , 2 பிள்ளைகளையும் விட்டு வர மாட்டேன் என்றாராம்.
விஷ மாத்திரை சாப்பிட்ட பிந்து
இதனால் மனம் நொந்து போன பிந்து, வீட்டில் தனியாக இருந்தபோது விஷ மாத்திரையை தின்று மயங்கி விழுந்து இறந்துவிட்டார்.. இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, பிந்துவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..
மேலும், பிந்துவுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தந்தவர், பக்கத்து வீட்டு தொழிலாளி உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்..
ஆனால், இன்று பிந்துவின் 2 குழந்தைகளும், தங்களது தந்தையுமின்றி, தாயுமின்றி நிர்க்கதியாய் தவித்து நிற்கின்றன...!












Click it and Unblock the Notifications