கன்னியாகுமரி இளம் பெண்.. நடுரோட்டில் தாலியுடன் வந்த நாகர்கோவில் இளைஞர்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தெற்கு சூரங்குடியைச் சேர்ந்த ஒரு இளைஞரும், கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இளம்பெண் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம் பெண் காதலை கடந்த ஆண்டு முறித்துக் கொண்டாராம். ஆனாலும் விடாமல் பின்தொடர்ந்த இளைஞர்கள், நடுரோட்டில் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தெற்கு சூரங்குடி என்ற ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞரும், கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த இளம்பெண் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தினமும் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்று வருகிறார்.

Kanyakumari Nagercoil marriage

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே கன்னியாகுமரி பெண்ணுக்கும், நாகர்கோவில் இளைஞருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாம். அதனால் நாகர்கோவில் இளைஞருடன் அந்த இளம்பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம். ஆனால் இதனை ஏற்காத அந்த இளைஞர், தொடர்ந்து அந்த பெண்ணை பின் தொடர்ந்து வற்புறுத்தி வந்தாராம். இதையடுத்து இளம்பெண்ணின் வீட்டார் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே நேற்று மாலை இளம்பெண் தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருமணம் தொடர்பான ஏற்பாடுகளை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தார். அத்துடன் அந்த வாலிபர் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்து இளம் பெண்ணை வழிமறித்து தாலி கட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த பெண் சத்தம் போட்டு அலறினார். உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்ததும் அந்த இளைஞனும், நண்பர்களும் தப்பி ஓடிவிட்டார்கள்.

பின்னர் இதுகுறித்து இளம்பெண் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த இளம்பெண் மற்றும் வாலிபரையும், அவர்களது குடும்பத்தினரையும் போலீசார் இன்று (வெள்ளிக்கிழமை) காலை போலீஸ் நிலையம் வருமாறு விசாரணைக்கு அழைத்தனர். இந்த சம்பவத்தால் கோட்டார் பகுதியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+