கன்னியாகுமரி திமுக வேட்பாளரின் தலையெழுத்தையே மாற்றிய தபால் ஓட்டு.. என்ன நடந்தது?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் என் வெற்றியை தேர்தல் அதிகாரிகள் பறித்துள்ளனர். 823 தபால் வாக்குகளை திட்டமிட்டு தில்லுமுல்லு செய்து நிராகரித்துள்ளனர். தபால் வாக்குகளை மீண்டும் எண்ணினால் நான் வெற்றி பெற்றதாக வரும் என திமுக வேட்பாளர் மகேஷ் கூறியுள்ளார்
திமுக நிர்வாகி ஒருவர் கூறும் போது, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் மகேஷ் போட்டியிட்டார். தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் எங்களுக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் முடிந்து இன்று வாக்கு பதிவு எண்ணப்பட்டது. 26 சுற்று வாக்குகள் எண்ணும் பணி நடந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 772 வாக்குகள் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏழு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணாமல் இருந்தது. அவற்றில் ஒரு சில பழுது ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு அவற்றை எண்ணிய நிலையில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தேர்தலில் 214 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறினர்.
தகவல் அறிந்ததும் எங்கள் வேட்பாளர் மகேஷ் மற்றும் தேர்தல் ஏஜெண்டுகள் தேர்தல் அதிகாரியிடம், வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி நடந்துள்ளது. தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை. வாக்குப்பதிவை மீண்டும் எண்ண வேண்டும் என மனு கொடுத்தார்கள். தேர்தல் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இது குறித்து கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் என்னை விட 214 வாக்குகள் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் அதிகம் பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்கள். மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தோம் அதனை ஏற்க மறுத்துவிட்டார்கள். 823 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. , அதிகாரிகளின் தவறால் ஏற்பட்ட தவறுகளை காரணம் காட்டி நிராகரித்துள்ளார்கள். திமுக தலைமையின் ஆலோசனை பெற்று சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு புறம்பாக அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தபால் வாக்குகளை மீண்டும் எண்ணினால் நான் வெற்றி பெற்றதாக வரும்" இவ்வாறு கூறினார்.
என்ன நடந்தது
இதனிடையே கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் நிராகரிக்கப்பட்டு இருந்த 828 தபால் ஓட்டுகளை எண்ண வேண்டுமென்று தி.மு.க. வேட்பாளர் மகேஷ் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகள் எண்ணும் பணி மீண்டும் நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பணியின் இறுதியில் 214 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:-
தளவாய்சுந்தரம் (அ.தி.மு.க.) - 74,904
மகேஷ் (தி.மு.க.) - 74,764
மாதவன் (த.வெ.க.) - 72,860
மரியஜெனிபர் (நா.த.க.) - 13,668
மணவை கண்ணன் - 140
சிவலிங்கம் - 194
ரீஜன் ஆன்ட்ரோ - 301
ஸ்ரீகிருஷ்ணகுமார் - 206
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications