நாளை முதல் கன்னியாகுமரியில் போக்குவரத்து மாற்றம்.. ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு
கன்னியாகுமரி: மயிலாடி கூண்டு பாலத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி 7-ந் தேதி (நாளை) காலை தொடங்குகிறது. தொடர்ந்து ஒரு மாத காலம் பணி நடைபெற உள்ளது. எனவே நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஒரு மாதம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது என்று கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மயிலாடி கூண்டு பாலத்தின் கீழ் ரூ.40 லட்சத்தில் சாலை சீரமைப்பு பணி 7-ந் தேதி (நாளை) காலை தொடங்குகிறது. தொடர்ந்து ஒரு மாத காலம் பணி நடைபெற உள்ளது. எனவே நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஒரு மாதம் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் சுசீந்திரம், வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக அஞ்சுகிராமம் செல்லும் அனைத்து வாகனங்களும் சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, பொற்றையடி வழியாக கொட்டாரத்தில் இடது புறமாக திரும்பி பெரியவிளை வழியாக பால்குளம் ரோடு சென்று அஞ்சுகிராமம் செல்ல வேண்டும். இதே போல அஞ்சு கிராமத்தில் இருந்து மயிலாடி, வழுக்கம் பாறை வழியாக சுசீந்திரம் செல்லும் அனைத்து வாகனங்களும் புண்ணார்குளம் சந்திப்பில் இருந்து இடது பக்கமாக திரும்பி பொட்டல்குளம் சந்திப்பு வழியாக நேராக சென்று பெரியவிளை, பெருமாள்புரம் வழியாக கொட்டாரம் சென்று சுசீந்திரம் செல்லலாம்.
அரசு பஸ்களை பொறுத்த வரையில் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம், வழுக்கம்பாறை, மயிலாடி வழியாக அஞ்சுகிராமம் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் சுசீந்திரம், வழுக்கம்பாறை வழியாக மயிலாடி ஆராட்டு பாலத்தில் இருந்து வலது புறமாக திரும்பி பொற்றையடி, கொட்டாரம், பெரியவிளை, பொட்டல்குளம், புண்ணார்குளம் வழியாக அஞ்சுகிராமம் செல்ல வேண்டும்.
அஞ்சு கிராமத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் புண்ணார்குளம் சந்திப்பில் இருந்து இடது புறமாக திரும்பி பொட்டல்குளம், பெரியவிளை, பெருமாள்புரம், கொட்டாரம் வழியாக செல்லலாம். போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications