அடேங்கப்பா! என்ன ஒரு வேகம்.. சிலம்பம் சுழற்றிய அமைச்சர் மனோ தங்கராஜ்.. வியந்து பார்த்த நாகர்கோவில்
கன்னியாகுமரி: தமிழக அளவிலான சிலம்பம் போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ், திமுக அரசின் மீதான அதிமுகவின் விமர்சனங்களுக்கும் வரும் கருத்துகளுக்கும் பதிலடி கொடுத்தார்.
Recommended Video
தமிழ்நாட்டில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் திமுக பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தச் சூழலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக அரசின் மீதான அதிமுக விமர்சனங்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழக அளவிலான சிலம்பாட்ட போட்டி இன்று நடைபெற்றது. லெமூரியா வர்மகளரி அடிமுறை உலக கூட்டமைப்பு சார்பாகச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பங்கேற்கும் இந்த போட்டியைத் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

சிலம்பம் சுழற்றிய அமைச்சர்
போட்டிகள் தொடங்கும் முன்னர், காண்போரை வியக்க வைக்கும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றி அசத்தினார். அசத்தலான முறையில் படுவேகமாக அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றியது அங்கு இருந்த கவனத்தையும் ஈர்த்தது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதையடுத்து மிகவும் துடிப்புடன் சிலம்பம் சுற்றிய அமைச்சரை இணையத்தில் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மேயர் வேட்பாளர்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், "ஐடி துறை சார்பில் சுமார் 8,000 ஓலைச்சுவடிகள் மின்னணுவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை இன்னும் ஒரு சில நாட்களில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வேட்பாளரை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். மேலும், குமரியில் இன்னும் ஜனநாயகம் தான் இருக்கிறது. பண நாயகத்தை நுழைய விட மாட்டோம்.

ஜெயக்குமார் மீது நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சட்டப்படி தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது ஒன்றும் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. கள்ள ஓட்டுப் போட வந்ததாகக் கூறி ஒருவரை அடித்து உதைத்து, இழுத்துச் சென்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு இதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? திமுக அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுகவினர் கூறுவது சரியில்லை. சட்டத்திற்கு உட்பட்டு நடக்க எதிர்க்கட்சியினர் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications