பெண்களிடம் "லீலை".. லீக்கான வீடியோ, போட்டோஸ்.. தலைமறைவான கன்னியாகுமரி பாதிரியார்.. என்ன நடந்தது?
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய மதபோதகர் பெனெடிக் ஆண்டோ தலைமறைவாகி உள்ளார். இவர் மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென தலைமறைவாகி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் ஒன்றில் பெனெடிக் ஆண்டோ பாதிரியாராக பணியாற்றி வந்தார். அவரின் லேப்டாப் சமீபத்தில் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. காரில் வந்த சிலர் கடந்த வாரம் அவரை தாக்கி, பெனெடிக் ஆண்டோ லேப்டாப்பை திருடிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில்தான் அவரின் லேப்டாப்பில் இருந்த பல அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த வீடியோக்கள் தொடர்பான பின்னணி கதைகளும் கூட தற்போது வெளியாகி உள்ளன.

என்ன நடந்தது?
அதன்படி இவர் பல பெண்களிடம் போனில் பேசி வந்துள்ளார். முக்கியமாக கல்லூரி மாணவிகளிடம் பேசி வந்துள்ளார். தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பேசி அவர்களின் போன் எண்களை வாங்கி உள்ளார். அதன்பின் அவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலம் பேசி உள்ளார். அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் ஆகி ஆபாசமாக பேச தொடங்கி உள்ளார். இவரின் பேச்சில் சில பெண்கள் அப்படியே மயங்கி உள்ளனர். இது அதன்பின் வீடியோ கால் வரை சென்றுள்ளது.

வீடியோ கால்
வீடியோ காலில் பெண்களிடம் ஆபாசமாக பேசி உள்ளார். அதோடு அவர்களை நிர்வாணமாக நிற்க சொல்லி அதை ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்துள்ளார். இது போக பெண்களை தனியாக அழைத்து அவர்களிடம் தவறாக நடந்து கொண்டு இருக்கிறார். அதன்பின் இந்த ஆபாச வீடியோக்களை வைத்து பெண்களை மிரட்டி இருக்கிறார். அவர்களிடம் காசும் கேட்டு இருக்கிறார். இதனால் பெண்கள் பலரும் அந்த பெனெடிக் ஆண்டோ கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். இப்படி வழிபாடு நடத்த வந்த பல பெண்களிடம் பெனெடிக் ஆண்டோ அத்துமீறி இருக்கிறார்.

புகார்
இந்த நிலையில்தான் நர்சிங் படிக்கும் மாணவி ஒருவர் பெனெடிக் ஆண்டோ மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் போலீசார் விரைவில் பெனெடிக் ஆண்டோவை கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய மதபோதகர் பெனெடிக் ஆண்டோ தலைமறைவாகி உள்ளார். இவர் மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென தலைமறைவாகி உள்ளார். நேற்று மாலையில் இருந்து அவர் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.

வீடியோக்கள்
இவரின் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. ஆபாச வீடியோக்கள் பல அடுத்தடுத்து வெளியாகி உள்ளன. இவர் தற்போது அந்த கிறிஸ்துவ வழிபாட்டு தலத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அந்த கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வேறு மதபோதகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் பல பெண்களை ஏமாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இவரிடம் ஏமாந்த மற்ற பெண்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதோடு பெண்கள் முன்வந்து புகார் கொடுக்க வேண்டும். அவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications