வாரத்தில் 3 நாட்கள் தொகுதியில் ஹால்ட்! விஜய் வசந்துக்கு ரூட் கிளியர்! கன்னியாகுமரி கள நிலவரம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் களமிறங்கவுள்ள விஜய் வசந்த் எம்.பி. வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் வரை தொகுதியில் தான் முகாமிடுகிறார்.
காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் இல்ல நல்லது கெட்டதுகளில் தவறாமல் தலையை காட்டும் விஜய் வசந்த் எம்.பி., தொகுதி மக்கள் வைக்கும் அழைப்பிதழ்களை ஏற்று அவர்களது இல்ல நிகழ்வுகளிலும் ஆஜராகிவிடுகிறார்.

கோடிக்கணக்கில் சொத்து, தமிழகமெங்கும் தொழில் சாம்ராஜ்யம், என்ற பல பெருமைகள் இருப்பினும் அதனை எந்த இடத்திலும் வெளிக்காட்டாமல் எளிமை காட்டுகிறார் விஜய் வசந்த். இது தான் இவரது ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாக அரசியல் செய்வதால், குமரி மாவட்டத்தில் திமுக தரப்பிலும் விஜய் வசந்துக்கு பெரிய எதிர்ப்பு இல்லை.
அதுமட்டுமின்றி விஜய் வசந்துக்கு ராகுல், சோனியா போன்றோரின் ஆசியும் உள்ளது. மறைந்த வசந்தகுமார் மீது ராகுலும், சோனியாவும் மிகப் பெரிய அளவில் நன்மதிப்பு வைத்திருக்கின்றனர். அதேபோல் தொகுதிப் பணிகளை தொய்வின்றி கவனிக்க அலுவலகங்கள், மக்களின் மனுக்களை ஃபாலோ அப் செய்ய ஊதியம் கொடுத்து தனி ஆட்கள் என பணியமர்த்தியுள்ளார்.

இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவும் விஜய் வசந்துக்கு உள்ளது. இதனால் இவருக்கு மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் சீட் கிடைப்பது உறுதியாகிவிட்டது. விஜய் வசந்தை எதிர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்.ராதாகிருஷ்ணன், பெண் கவுன்சிலர் மீனா தேவ் உள்ளிட்ட பலர் பாஜக சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications