Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே லாட்ஜில்.. இளம் பெண் அப்படி வந்து நின்றதுமே.. ஆடிப்போன சரவணன்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை பொறுத்தவரை மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலா நகரமாகும். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்ரீகர்களும் வந்து செல்கிறார்கள்.இவர்களுக்காகவே கன்னியாகுமரியில் ஏராளமான விடுதிகள் உள்ளன. கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் ஆயிரம் கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம் என்று இளைஞரை அழைத்துள்ளார்கள் . அவர் கொடுத்த புகாரால் விபச்சாரம் நடத்திய விடுதி பெண் மேலாளர், புரோக்கர் ஆகிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்தியாவின் ஆரம்பம் என்று சொல்லக்கூடிய இடமாக கன்னியாகுமரி நகரம் இருக்கிறது. தினசரி காலை சூரிய உதயத்தை பார்க்க பலரும் விரும்பி வருகிறார்கள். இதன் காரணமாக மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலா நகரமாக கன்னியாகுமரி திகழ்கிறது.. வங்கக்கடல், அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல் என முக்கடல் சங்கமிக்கும இடம் என்பதால் ஆன்மீக யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இடமாக திகழ்கிறது.

Kanyakumari Lodge massage

சூரிய உதயம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம், ரம்மியமான கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இடமாக இருக்கிறது. கேரளாவின் திருவனந்தபுரம், தென்காசி குற்றாலம் வரும் பயணிகள் பலரும், கன்னியாகுமரி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். வட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கிறார்கள். எப்போதுமே சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நகரமாக கன்னியாகுமரி இருப்பதால், இங்கு ஏராளமான விடுதிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்த 32 வயதாகும் சரவணன் என்பவர், நேற்று முன்தினம் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொற்றையடியைச் சேர்ந்த 53 வயதாகும் உதயகுமார் என்பவர் சரவணனிடம் ரூ.1,000 கொடுத்தால் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினாராம்.

பின்னர், அவரை கன்னியாகுமரி ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றாராம். சரவணன் அங்கு சென்றபோது, அறையில் 40 வயது பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் இருந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆடிப்போன சரவணன், உடனே அங்கிருந்து அமைதியாக வேண்டாம் என்று கூறி வெளியேறியதுடன், இதுபற்றி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாராம்.

அதன்பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினார்கள். அதில் அங்கு விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த அந்த பெண்ணை மீட்டு நாகர்கோவிலில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தார்கள். இதுதொடர்பாக விபச்சார புரோக்கரான உதயகுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட விடுதி மேலாளரான சிந்தியா (40) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

முன்னதாக கடந்த ஒரு வாரம் முன்பு கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் மற்றும் போலீசார் விடுதிகளில் கடந்த வாரம் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது விடுதியோடு சேர்ந்திருந்த ஒரு மசாஜ் சென்டரில் 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல் மற்றொரு விடுதியில் ஒரு பெண் விபசார தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலாளர் பால்வின் ராபின்சன், மசாஜ் சென்டர் நடத்திய சஜித்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் 3 பேரையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அனுமதியின்றி நடத்தப்படும் அனைத்து மசாஜ் சென்டர்களையும் மூட போலீஸ் சார்பில் உத்தரவிட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் மசாஜ் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தினால் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+