ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி! இரவு முழுவதும் தேடிய போலீஸ்! மறுநாள் இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

அருமனை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தண்ணீரில் மூழ்கியதாக தேடப்பட்டு வந்த இளைஞர் , போதையில் இரவு முழுவதும் ஆற்றுக்கு நடுவே பாறையில் தூங்கி விட்டு, காலையில் வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அருமனை அருகே மணியங்குழி அஞ்சுகண்டறை பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது தொழிலாளி. இவர் நண்பர்கள் இருவருடன் நேற்று முன் தினம் மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் கோதையாற்று கரையான வண்ணம்பாறை பகுதிக்குச் சென்றனர்.

kanyakumari police

அங்கு தொழிலாளி ஆற்றில் குளிக்க இறங்கியபோது நண்பர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். ஆனால் அவரோ அவர்களின் சொல்பேச்சை கேட்காமல் ஆற்றில் இறங்கி குளித்தார். சிறிது நேரத்தில் அந்த தொழிலாளியை காணவில்லை. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தொழிலாளி ஆற்றில் அடித்து சென்றிருப்பார் என கருதினர்.

அவரை நண்பர்கள் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து விஷயத்தை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்கள், "ஏன் அவரை ஆற்றில் குளிக்க விட்டீர்கள். உங்களை நம்பிதானே அவரை அனுப்பி வைத்தோம்" என கேட்டனர். இதையடுத்து இனியும் தாமதிக்கக் கூடாது என கருதிய குடும்பத்தினர், கடையால் போலீஸாருக்கும் குலசேகரம் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர்கள் தேடி பார்த்தனர். அப்போது அந்த தொழிலாளி கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து மகனை காணாமல் அவருடைய குடும்பத்தினர் கண்ணீருடன் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் அதிகாலையில் அவர்களின் வீட்டின் கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது.

இதையடுத்து கதவை திறந்து பார்த்தால் அங்கு அவர்களது மகன் உயிரோடு இருந்தார். அவரை பார்த்ததும் பெற்றோர் அவரை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். ஆனால் அந்த தொழிலாளி போதையில் இருந்ததால் நடந்த சம்பவம் குறித்து அவருக்கு எதுவும் தெரியவில்லை. பெற்றோரும் அவரிடம் எதையும் கேட்கவில்லை.

இது தெரியாமல் காலையில் அந்த தொழிலாளியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தேடினர். மேலும் அங்கிருந்த பைக்கும் காணவில்லை. இதையடுத்து போலீஸார் அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த தொழிலாளியின் போலீஸார் அவர் வீட்டிற்கு வந்ததை தெரிவித்தனர். அப்போது போலீஸார், "ஏம்மா, ஆற்றோரத்தில் உங்கள் மகனை சல்லடை போட்டு தேடிகிட்டு இருக்காங்க. ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்" என கடிந்த போலீஸார் தூக்கத்தில் இருந்த தொழிலாளியை எழுப்பி நடந்ததை கேட்டனர்.

அப்போது "போதையில் குளிக்க இறங்கியதும் சிறிது நேரத்தில் என்னை தண்ணீர் இழுத்து சென்றதும், அங்கிருந்த பாறையை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். பின்னர் அதில் ஏறியதும் அங்கேயே படுத்து தூங்கிவிட்டேன். விடியற்காலை எழுந்து வீட்டிற்கு வந்துவிட்டேன் என கூறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+