இரட்டை இலைக்கு ஓட்டுபோட வாக்காளர்களுக்கு மிரட்டல்.. அதிமுக பிரமுகர் மீது பரபர புகார்.. வைரலான வீடியோ
கரூர்: கரூர் மாவட்டத்தில், வாக்குப் பதிவு மையங்களுக்கு வருகை தரும் பொது மக்களை, அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டும் என்று அந்த கட்சி பிரமுகர், மிரட்டியதாக வீடியோ வெளியாகியுள்ளது.
Recommended Video
கரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கரூர் கிழக்கு ஒன்றியம், வாங்கல் ஊராட்சி பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் கரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், அப்பகுதி அதிமுக பிரமுகருமான பாலமுருகன் மீது பகீர் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது, வாக்களிக்க வரும் பொதுமக்களை இரட்டை இலை வாக்குகள் அளிக்குமாறு வற்புறுத்தி பகிரங்கமாக மிரட்டியுள்ளார் அவர்.

போலீசார் முன்னிலையிலும், பாதுகாப்புக்கு வந்த துணை ராணுவத்தினர் முன்னிலையிலும் பகிரங்கமாக அவர் மிரட்டல் விடுக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தேர்தல் ஆணையம் கவனிக்குமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications