முதல்வர் ஒன்றும் புனிதரல்ல.. நானும் மகானும் அல்ல.. டிடிவி தினகரன் பொளேர்
தேர்தலை சந்திக்கவே எங்களுக்கு விருப்பம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கரூர்: "முதல்வர் ஒன்றும் புனிதரல்ல நானும் ஒன்றும் மகானும் அல்ல" என்று என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான தீர்ப்பு வந்ததையடுத்து பல்வேறு கருத்துகளும், சர்ச்சைகளும், விமர்சனங்களும் தமிழக அரசியலில் எழுந்து வருகின்றன. அதில் குறிப்பாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை விட்டிருந்தனர். இதனை டிடிவி அணி தரப்பினர் ஏற்கவில்லை.
[தினகரன் முகாமை காலி செய்ய வைக்கும் அழைப்பு... பலிக்குமா அதிமுக கனவு!]

தினகரன் பேட்டி
இந்நிலையில் டிடிவி தினகரன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தாங்கள் எதற்காக மேல்முறையீடு செய்தோம் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

மக்கள் விருப்பம்
அதிமுக அரசு நீடிக்க நாங்கள் காரணமாக இருந்துவிடக் கூடாது. அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவெடுத்தோம். மேல்முறையீடு செய்தால் தேர்தலை தள்ளி வைக்க வாய்ப்பாகவும்அமைந்துவிடும். அதனால் தேர்தலை நாங்கள் சந்திப்பது குறித்து யோசனை செய்து வருகிறோம். இந்த ஆட்சி தொடரக்கூடாது என்பதற்காகவே, தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதுதான் மக்களின் விருப்பமாகவும் உள்ளது.

குழப்பம் ஏதும் இல்லை
என்னுடன் இருக்கும் 18 எம்எல்ஏக்களிடம் எந்த குழப்பமும் இல்லை. அவர்கள் எல்லோருமே ஒற்றுமையாக உள்ளனர். ஆனால் அதிமுகவுக்கு துரோகம் இழைத்தது யார் என்று மக்கள் நன்றாக அறிவார்கள். தேர்தல் உடனடியாக நடத்தப்பட்டாலும் நாங்கள் நிச்சயம் போட்டியிடுவோம். தேவைப்பட்டால் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கை கூட வாபஸ் பெறுவோம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மகான் அல்ல
கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், டிடிவி தினகரன் குறித்து கருத்து கூறும்போது 'டிடிவி தினகரன் என்ன மகானா?' என்று விமர்சித்திருந்தார். இந்த கருத்து குறித்தும், கட்சியில் மீண்டும் இணைவது குறித்து அழைப்பு விடுத்துள்ளது குறித்தும் செய்தியாளர்கள் தினகரனிடம் கேட்டனர். அதற்கு, "முதல்வர் ஒன்றும் புனிதரல்ல நானும் ஒன்றும் மகான் அல்ல, டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணையை பார்த்து அவர் பயந்திருக்கிறார் என்றும், என்னுடன் 90 சதவீத தொண்டர்கள் இருப்பதால்தான் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றும் தினகரன் பதிலளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications