அதிமுக மாஜி எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் சிபிசிஐடி கஸ்டடியில் விசாரிக்க அனுமதி! கூடவே முக்கிய நிபந்தனை
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கையில் எடுத்தனர். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார்.

சிபிசிஐடி போலீசாரால் தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்தார் விஜயபாஸ்கர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் நெருங்கிய நண்பர்கள் உதவியுடன் கேரள மாநிலம் திருச்சசூரில் பதுங்கி இருப்பதாகவும், அவர் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி வருவதாகவும் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16 ஆம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டார் விஜயபாஸ்கர்.
பின்னர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை 17ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அதேசமயம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் தீவிரமாக இருக்கும் சிபிசிஐடி போலீசார், சொத்து ஆவணங்கள் மோசடி தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சிபிசிஐடி போலீசார் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை கேட்ட நீதிபதி பரத்குமார் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், நீதிபதி இதில் சில நிபந்தனைகளையும் பிறப்பித்தார். எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது அவரது தரப்பினர் உடன் இருக்கலாம். ஆனால் விசாரணைக்கு எந்தவித தொந்தரவும் அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications