''தீபாவளிக்கு புத்தாடை எடுக்கமாட்டேன்.. அம்மா இறந்த பிறகு எந்த பண்டிகையும் இல்லை''! -ஜோதிமணி எம்.பி.
கரூர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தீபாவளி பர்ஸேஸ் எல்லாம் முடிந்துவிட்டதா என்றும் கொண்டாட்டங்கள் பற்றியும் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எம்.பி.யிடம் பேசினேன். அப்போது அவர் பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு;
புத்தாடை எடுக்கமாட்டேன்: ''தீபாவளியை பொறுத்தவரை மற்றொரு நாளாக தான் கடந்து போய்விடுவேன். புத்தாடைகள் எடுப்பதோ, அன்றைய தினம் அசைவ உணவு சாப்பிடுவதோ என எந்த கொண்டாட்டத்திலும் ஈடுபடமாட்டேன். சொந்தக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள பூர்வீக வீட்டில் இருப்பேன். அவ்வளவு தான் எனது தீபாவளி. அம்மா இறந்து 6 வருடங்களாகிவிட்டது, இந்த 6 வருடங்களுமே நான் பெரிதாக எந்தப் பண்டிகையையும் கொண்டாடுவதில்லை. எனக்கென்று இருந்த ஒரே ஆதரவு அம்மா, அவர்களே இல்லாத போது பண்டிகைகள் கொண்டாட எப்படி மனம் வரும்.''

ஆட்டுக்கறி -கோழிக்கறி: ''சிறு வயது தீபாவாளி கொண்டாட்டங்களை பற்றி வேண்டுமானால் சொல்கிறேன், தீபாவளி வந்துவிட்டாலே அப்புச்சி புத்தாடைகள் எடுத்துக் கொண்டு வந்து எங்க வீட்டில் கொடுத்துவிடுவார். ஆட்டுக்கறி, கோழிக்கறி என காலையிலேயே வீடு கமகமக்கும். 4 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க அப்புச்சி எழுப்பிவிடுவார். அப்ப மட்டும் ஏன்டா தீபாவளி வந்துச்சுன்னு தோனும். குளித்து புத்தாடைகள் அணிந்தவுடன் பட்டாசுகள் வெடிக்க போய்விடுவேன். பட்டாசு வெடிப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.''
அது ஒரு காலம்: ''குறிப்பாக கையில் பட்டாசை பற்ற வைத்து அதை தூக்கி எறிவேன். இதனால் எங்கம்மா தீபாவளி அன்று பதற்றத்துடன் என்னை கண்காணித்தப்படியே என் கூட நிற்பார்கள். அதெல்லாம் ஒரு காலம். நினைவுகள் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன. அப்புச்சி, அம்மா, மாமா, என உறவினர்களோடு சேர்ந்து பள்ளிப்பருவத்தில் தீபாவளி கொண்டாடியதை என்னால் எந்நாளும் மறக்கமுடியாது. நான் தீபாவளியை கொண்டாடவிட்டாலும் பொங்கல் மட்டும் ஒரு நாள் கொண்டாடுவேன். ''
இவ்வாறு கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி தனது தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றியும் பழைய நினைவலைகளையும் பகிர்ந்துகொண்டார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications