கரூரில் மாஸ் காட்டிய செந்தில்பாலாஜி... பிரம்மாண்டமான மக்கள் கிராம சபைக் கூட்டம்.. ஸ்டாலின் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் மிக பிரம்மாண்ட முறையில் மக்கள் கிராம சபை கூட்டத்தை கூட்டி ஸ்டாலினை உற்சாகப்படுத்தி உள்ளார்.

தமிழகம் முழுவதும் 16,500 ஊராட்சிகளில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் ஸ்டாலின் நேரடியாக கலந்துகொண்டு வருகிறார்.

Senthil Balaji convened a grand gathering in Karur

அந்தவகையில் கரூர் மாவட்டம் குப்புச்சிபாளையத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அங்கு இதுவரை அவர் பங்கேற்ற கூட்டங்களில் இல்லாத அளவுக்கு கூட்டம் குவிந்திருந்தது. இதனால் உற்சாகமான ஸ்டாலின் செந்தில்பாலாஜியை புகழ்ந்து பேசியதோடு எதிலும் பிரம்மாண்டத்தை காட்டக் கூடியவர் என பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து அதிமுக ஆட்சி குறித்து மக்களிடம் பேசிய ஸ்டாலின், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் பற்றி விமர்சித்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் அதிலுள்ள மர்மங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் வெளி கொண்டுவரப்படும் எனவும் உறுதியளித்தார்.

Senthil Balaji convened a grand gathering in Karur

மேலும், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். தியானம் இருந்ததை ஸ்டாலின் நடித்துக்காட்டியதால் கூட்டத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பி சிரித்தனர். தொடர்ந்து கிராம மக்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்த ஸ்டாலின் அதன் பின்னர் திருச்சி வழியாக தஞ்சை புறப்பட்டுச் சென்றார்.

இதனிடையே குளித்தலை, பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+