குளித்தலையில் போட்டியிட வற்புறுத்தினார் செந்தில் பாலாஜி.. ஏன் தெரியுமா? சீக்ரெட்டை உடைத்த உதயநிதி!
குளித்தலை தொகுதியில் போட்டியிட செந்தில் பாலாஜி வற்புறுத்தியதாக உதயநிதி கூறியுள்ளார்.
கரூர்: சட்டமன்றத் தேர்தலின் போது குளித்தலை தொகுதியில் போட்டியிட அமைச்சர் செந்தில் பாலாஜி வற்புறுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதல்முறையாக குளித்தலையில் இருந்து தான் எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டதாக கூறிய அவர், அதேபோல் என்னையும் போட்டியிட செந்தில் பாலாஜி வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏராளமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
அதேபோன்று பல திரைப்படங்களிலும் அவர் நடித்து உள்ளார். தொடர்ந்து சினிமாக்களில் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

இளைஞரணி செயலாளர்
இளைஞரணி தலைவராக பதவியேற்றதில் இருந்தே கட்சிப் பணிகளில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக தான் செயலாளராக பதவி வகித்து வரும் இளைஞரணியில் ஆட்களை சேர்க்கும் பணியில் முழு மூச்சாக இறங்கி 30 லட்சத்துக்கும் அதிகமானோரை திமுகவில் இணைத்தார்.

எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்
இளைஞரணிக்காகவும், கொரோனா காலத்தில் மக்கள் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு மு.க.ஸ்டாலினை கவர்ந்த உதயநிதிக்கு, 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் சீட் கிடைத்தது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் களத்தில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ-வாக உயர்ந்தார்.

உதயநிதி ஸ்டாலின் சீக்ரெட்
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தான் கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று செந்தில் பாலாஜி வலியுறுத்தியதாக உதயநிதி ஸ்டாலின் சீக்ரெட் உடைத்துள்ளார்.

கரூரில் உதயநிதி
கரூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வந்த உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கரூர் என்றால் மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால் கரூரில் தொடங்கும் பணிகள் உற்சாகத்தை கொடுக்கும். தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களுக்கும் முன்மாதிரியான மாவட்டமாக திகழ்வது கரூர் தான். எந்த வேலையை எடுத்தாலும், அனைவரும் பிரமிக்கும் அளவிற்கு பணிகளை முடிப்பது தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஸ்டைல். அதற்கு ஆயிரக்கணக்கில் கூடி இருக்கும் மக்களே ஆதாரம்.

செந்தில் பாலாஜி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது சட்டமன்றப் பணிகளை கரூர் மாவட்டத்தில் இருந்து தான் தொடங்கினார். 5 முறை முதலமைச்சர், 13 முறை எம்எல்ஏ என்று இருந்தாலும், முதல்முறையாக எம்எல்ஏ-வாக தேர்வு செய்தது குளித்தலை தொகுதி தான். அதேபோல் நான் முதல்முதலாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்று முடிவு செய்த போது, செந்தில் பாலாஜி என்னை குளித்தலையில் போட்டியிட வற்புறுத்தினார்.

கரூரில் வெற்றி
சேப்பாக்கம் தொகுதியும் கருணாநிதி வென்ற தொகுதிதான். அதில் சில நாட்களிலேயே பிரச்சாரத்தை முடித்துவிடலாம் என்றேன். அதற்கு நீங்கள் போட்டியிடுங்கள், நான் வென்று காட்டுகிறேன் என்று கூறினார். நான் இங்கு போட்டியிடவில்லை என்றாலும், கரூர் மாவட்டம் முழுமையாக வென்று காட்டியவர் செந்தில் பாலாஜி என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications