முரசொலியிலேயே வந்துருக்கு.. ஸ்டாலின் இல்லைன்ணு சொல்ல முடியாது.. பேப்பருடன் பழனிச்சாமி
கரூர்: செந்தில் பாலாஜியை முன்பு இகழ்ந்து பேசிய ஸ்டாலின், இப்போது புகழ்ந்து பேசி நாடகமாடுகிறார, இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெஞ்சமாங்கூடலூரில் திங்கள்கிழமை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி எனது தகுதியை பற்றி பேச தகுதி இல்லை என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது முரசொலி பத்திரிக்கையில் வந்திருக்கு.அவரது கட்சி பத்திரிக்கையில் வந்திருக்கு. இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது.
ஆனால் அதே ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி நல்லவர், வல்லவர் என்று கூறி ஓட்டுப்போடுமாறு கேட்கிறார் ஸ்டாலின்" இவ்வாறு கூறினார்.
குரும்பப்பட்டியில் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "துரோகியால் இப்போது இங்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை முன்பு இகழ்ந்து பேசியவர். இப்போது புகழ்ந்து பேசி நாடகமாடுகிறார். மக்கள் ஸ்டாலினின் நாடகத்தை நம்ப மாட்டார்கள்" என்றார்
கரூரில் புதியதாக கட்டப்படும் மருத்துவ கல்லூரி விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் விவசாயிகள் பயன்படும் வகையில் முருங்கைக்காய்க்கு குளிர்ப்பதன கிடங்கு அமைக்கப்படும் என்றும் பிரச்சாரங்களின் போது முதல்வர் பழனிச்சாமி உறுதி அளித்தார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications