8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது.. பெற்றோர் ஆர்ப்பாட்டம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவி ஒருவர் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி 3 ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 8ஆம் வகுப்பு மாணவி, கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களான சின்னச்சாமி, பிரகாஷ் மற்றும் ஆறுமுகம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 ஆசிரியர்களும் உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் 3 ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான ஆசிரியர்களை தங்கள் முன் கொண்டு வர வேண்டும் என்று ஆவேசமாக பேசி வருகின்றனர். அதேபோல் பெற்றோர் தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேபோல் மாணவி கருவுற்று, கருக்கலைப்பு செய்த விஷயம் கூட அந்த பள்ளிக்கு தெரியவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராததால், சந்தேகத்தின் பேரில் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது தான் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications