ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு? கடுகடுத்த புகழேந்தி!
ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசி வருவதாகவும் இதுபோன்று பேசுவதற்கு, அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி: நீங்கள் ஏன் ஜெயலலிதாவை பற்றி தவறாக பேச வேண்டும். நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணாமலை.. உங்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என்று ஓசூரில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதாவை சிறுமைப்படுத்தி அண்ணாமலை பேசி வருவதாகவும் இதுபோன்று பேசுவதற்கு, அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். புகழேந்தி கூறியதாவது:-

உங்களுக்கு என்ன ஆனது..
ஒருவாரமாக பார்த்தீர்கள் என்றால் அண்ணாமலை கோஷ்டியும் எடப்பாடி கோஷ்டியும் பயங்கரமாக மோதிக்கொண்டு இருக்கிறார்கள். அண்ணாமலை போன்ற நிறைய ஐபிஎஸ் அலுவலரோடு நான் பழகியிருக்கிறேன். உங்களுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பல பேர் உங்கள் மீது சந்தேகப்படுகிறார்கள். மன ரீதியாக உங்களுக்கு அவருக்கு எதுவும் பாதிப்பு இருக்குமோ பிரச்சினை இருக்குமோ என்று பல பேர் பேசுகின்றனர்.

பெண்களை இழிவுபடுத்தும் மாதிரி
அதை உறுதிப்படுத்துற மாதிரி கன்னா பின்னா என பேட்டி அளிக்கிறார். என்னுடைய தாய், ஜெயலலிதாவை விட நூறு மடங்கு உயர்ந்தவர்... அடுத்து சொல்கிறார் எனது மனைவி ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் என்று.. இதையெல்லாம் உங்களிடம் யார் கேட்டது. உலக மகளிர் தினம் கொண்டாடும் நேரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் மாதிரி பேசுகிறார். உங்கள் தாயை பற்றி தரக்குறைவாக நான் பேசும் அளவிற்கு நான் தரம் கெட்டவன் இல்லை. உங்கள் மனைவியை நான் சகோதரியாக பார்க்க கூடியவன்.

நல்ல மனநல மருத்துவமனையை..
நீங்கள் ஏன் ஜெயலலிதாவை பற்றி தவறாக பேச வேண்டும். நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணாமலை.. அண்ணாமலையின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். அண்ணாமலையை ஏற்கனவே பல தலைவர்கள், உளவியல் ரீதியாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக விமர்சனங்களை வைக்கிறார். எனவே, அவர் ஒரு நல்ல மனநல மருத்துவமனையை அல்லது மருத்துவரை அணுகுவது நல்லது.

தோல்விகளை சந்தித்து வருகிறார் எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து, தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கு அவர்களது நடவடிக்கைகளும் மக்களின் எதிர்ப்புமே காரணம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றின் போது, கருணாநிதி, ஜெயலலிதா போல நான் முடிவு எடுப்பேன். அவர்களை போல நானும் தலைவன்தான் என்று பேசி இருந்தார். அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசியது அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. திமுகவின் ஜெயக்குமார் போன்றவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

ஜெயலலிதாவை ஒப்பிட்டு கூறவில்லை
பின்னர் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் பேட்டி அளித்த அண்ணாமலை, "நான் கூறிய கருத்தில் இருந்து பின் வாங்க போவது இல்லை. அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். ஜெயலலிதாவை ஒப்பிட்டு நான் கூறவில்லை. அரசியல் கட்சியில் சில இடங்களில் மேனேஜரும் சில இடங்களில் தலைவரும் இருக்கின்றனர். ஜெயலலிதா கூட டெபாசிட் இழந்து மீண்டும் களத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். என் தாய் என் மனைவி ஆகியோர் ஜெயலலிதாவை விட பலம் கொண்டவர்கள்" என்று கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சும் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்து












Click it and Unblock the Notifications