பிரிட்டன் நாட்டை விட்டு வெளியேறிய இந்தியர்கள்.. மொத்தம் 80% வெளிநாட்டினர் வெளியேற்றம்.. என்ன காரணம்?
லண்டன்: கடந்த பல ஆண்டுகளாகவே பிரிட்டனுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாற ஆரம்பித்துள்ளது. பிரிட்டனுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை பெரியளவில் சரிந்துள்ளது. கடந்த 2023 உடன் ஒப்பிடுகையில் குடியேற்றம் 80% வரை சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் குடியேற்றம் தான் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காகப் பல்வேறு தரப்பினரும் இப்படி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், வெளிநாட்டினர் எண்ணிக்கை குறிப்பிட்ட லெவலுக்கு மேல் அதிகரிக்கும்போது உள்ளூர் மக்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.

பிரிட்டன்
கடந்த சில ஆண்டுகளாகவே பிரிட்டன் நாட்டில் இதுதான் பெரிய சிக்கலாக இருந்து வந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் பிரிட்டனுக்கு வருவதால் அங்கு உள்ளூர் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இதைச் சரி செய்யப் பிரிட்டன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கிடையே பிரிட்டனுக்குச் செல்வோர் எண்ணிக்கை கடுமையாகச் சரிந்துள்ளதாகச் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடும் சரிவு
2023ல் தான் குடியேற்றம் உச்சத்தில் இருந்துள்ளது. அந்த நம்பருடன் ஒப்பிடுகையில், 2025 ஜூன் மாதத்தில் குடியேற்றம் 80% சரிந்துள்ளது. அதாவது 2023 உடன் ஒப்பிடுகையில் 2 லட்சம் பேர் குறைவாகவே பிரிட்டனில் தங்கியுள்ளனர். அதாவது அங்கு நிகரக் குடியேற்றம் குறைந்தே வருகிறது. பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் அங்கிருந்து கிளம்பும் வெளிநாட்டினரின் எண்ணிக்கைக்கு இடையே இருக்கும் வித்தியாசமே நிகர இடம்பெயர்வு எனப்படுகிறது. இதுதான் இப்போது சரிந்து வருகிறது.
பிரிட்டனை விட்டு வெளியேறியவர்களில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். மொத்தம் 74,000 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதில் சுமார் 45,000 பேர் மாணவர் விசாக்களிலும், 22,000 பேர் ஒர்க் விசாக்களிலும், 7,000 பேர் பிற விசாக்களிலும் இருந்தவர்களாவர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சுமார் 42,000 சீன நாட்டவர்கள் வெளியேறியுள்ளனர்.
ஏன் முக்கியம்
அதற்காகப் பிரிட்டன் நாட்டிற்கு இந்தியர்கள் செல்லவே இல்லை எனச் சொல்ல முடியாது. பிரிட்டனுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தே வருகிறது. இருப்பினும், அதே வேகத்தில் அங்குள்ளவர்களும் வெளியேறுகிறார்கள் என்பதே விஷயமாகும். இப்படி அதிக பேர் வெளியேறுவது உள்ளூர் மக்களுக்கு நல்லது என்றே பிரிட்டன் அரசு சொல்கிறது.
இது தொடர்பாகப் பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் கூறுகையில், "நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். இதன் மூலம் குடியேற்றம் ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இன்னும் பல சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செய்து வருகிறோம். இங்கு வருவோருக்குப் பிரிட்டன் அரசு நிறையச் சலுகைகளை வழங்குகிறது. இருப்பினும், அவர்கள் பயன்படுத்தும் சலுகைகளை விட, அவர்கள் பிரிட்டனுக்கு அதிகம் பங்களிக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினார்.
எச்சரிக்கை
நடப்பு ஆண்டில் பிரிட்டனில் 31 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டன. இது முந்தைய ஆண்டின் 3.2 மில்லியன் விசாக்களுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய குறைவு. குறிப்பாக 2.73 லட்சம் ஒர்க் விசாக்கள் மட்டுமே தரப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 39% குறைவாகும். வெளிநாட்டினர் வருகை குறைவது நன்மை தான் என்றாலும் கூட இது ஒரேயடியாக பெரியளவில் சரிந்தால் அது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications